For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மீனாவுக்கு கிடைத்தது போல.. சமந்தாவுக்கு ஆறுதல் சொல்ல ஒரு தோழி கூட சினிமாவில் கிடைக்கலையா?

  |

  சென்னை: நடிகை சமந்தா கண் கலங்கி "நான் அவ்ளோ சீக்கிரத்துல செத்துட மாட்டேன்" என சொன்ன வீடியோ வெளியான பின்னர் கூட எந்தவொரு முன்னணி நடிகையும் சமந்தாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லையே ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  போண்டா மணி உடல் நலக்குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பல பிரபலங்கள் அவரை சென்று சந்தித்தனர்.

  ஆனால், சமந்தா தனக்கு அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வெளிப்படையாக சொன்ன பிறகும் கூட முன்னணி நடிகர்கள் ஒரு சிலரை தவிர ஒட்டுமொத்த திரைத்துறையும் பெரிதாக கண்டு கொள்ளாதது ஏன்? என்கிற கேள்வியை சமந்தா ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

  யசோதா பிரீ தியேட்டர் பிசினஸ்… கெத்து காட்டிய சமந்தா… மிரண்டு போன திரையுலகம்… யசோதா பிரீ தியேட்டர் பிசினஸ்… கெத்து காட்டிய சமந்தா… மிரண்டு போன திரையுலகம்…

  மீனாவுக்கு சக நடிகைகள் ஆறுதல்

  மீனாவுக்கு சக நடிகைகள் ஆறுதல்

  சமீபத்தில் நடிகை மீனாவின் கணவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், உடனடியாக ரம்பா உள்ளிட்ட சக நடிகைகள் ஓடிப் போய் அவருக்கு ஆறுதல் சொன்னார்கள். ராதிகா சரத்குமார், ஸ்ரீதேவி, பிருந்தா மாஸ்டர் உள்ளிட்ட பலர் சமீபத்தில் நடிகை மீனாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவரது பிறந்தநாள் அன்று அவரை சந்தோஷமாக வைத்துக் கொண்டதை பார்க்கவே சினிமாவில் இத்தனை நல்ல நண்பர்களை சேமித்து வைத்திருக்கிறாரே என எண்ணத் தோன்றியது.

  சமந்தா கண்ணீர் விட்டும்

  சமந்தா கண்ணீர் விட்டும்


  ஆனால், அதே சமயம் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என அறிவித்த நிலையில் கூட ஒரு சக நடிகை கூட சமந்தாவை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறவில்லையே ஏன் என்கிற கேள்வியை சமந்தா ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அந்த அளவுக்கா நடிகைகள் ஷூட்டிங்கில் பிசி என்றும் விளாசி வருகின்றனர்.

  நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்

  நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்

  நடிகை நயன்தாரா உடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்து நடித்து இருந்தார் சமந்தா. ஆனால், சமந்தா கண் கலங்கி அழுததை பார்த்த நிலையிலும், சமந்தாவுக்கு ஆறுதலாக அவரை நேரில் சென்று சந்தித்து இருக்கலாமே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகையர் திலகம், சீமராஜா உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்திருந்தார் சமந்தா ஆனால், கீர்த்தி சுரேஷ் ஒரு ட்வீட் கூட சமந்தாவை தேற்றும் விதமாக போடவில்லையே ஏன்? என்றும் புஷ்பா பாடலின் வெற்றிக்கு உதவிய சமந்தாவை ராஷ்மிகா மந்தனாவும் கண்டு கொள்ளவில்லையே ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

  போட்டி ஒழிந்தது

  போட்டி ஒழிந்தது

  பிசினஸ் மைண்ட் உடன் இந்த காலத்து நடிகைகள் இயங்கி வருவதாகவும், நமக்கு ஒரு போட்டி ஒழிந்தது என்று வேண்டுமானால், சந்தோஷப்படுவார்களே தவிர நேரடியாக சென்று சக நடிகைக்கு என்ன ஆச்சுன்னு ஒரு எட்டுப் போய் பார்த்து விட்டு வர முடியாது என சமந்தாவுக்காக மற்ற நடிகைகளை ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

  சமந்தா ட்வீட்

  சமந்தா ட்வீட்

  உடல்நிலை முடியாத நிலையிலும், தனது நடிப்பில் உருவாகி உள்ள யசோதா படம் பெரு வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார் சமந்தா. நாளை சமந்தா, வரலக்‌ஷ்மி சரத்குமார் நடித்த யசோதா படம் வெளியாகும் நிலையில், fingers crossed போட்டோவை தற்போது ட்வீட் செய்திருக்கிறார் சமந்தா. நிச்சயம் அவரது உழைப்பு வீணாகாது என ரசிகர்கள் முழு ஆதரவை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

  English summary
  Samantha fans raises some questions in social media, Why No Heroines ready to solace Samantha after she brokedown with Myositis?. Samantha awaits for a success of her upcoming movie Yashoda Tomorrow.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X