»   »  பல தடவை கட்டிக்கணும், வத வதன்னு பெத்துக்கணும்.. இது ஒரு நடிகையின் ஆசை பாஸ்!

பல தடவை கட்டிக்கணும், வத வதன்னு பெத்துக்கணும்.. இது ஒரு நடிகையின் ஆசை பாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒரு முறைக்கு மேல் திருமணம் செய்து கொள்ள வேண்டும், வத வதவென குழந்தைகள் பெற வேண்டும் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் டெல்லியில் நடந்த ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டார். டிசைனர் மானவ் கங்வானி வடிவமைத்த ஆடையை அணிந்து அவர் ரேம்ப் வாக் செய்தார்.

கங்கனாவுக்கு அந்த உடை மிகவும் பொருந்தியிருந்ததாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

கங்கனா

கங்கனா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச மாட்டேன் என்று தெரிவித்த கங்கனா தனது திருமணம், முதலீடு, வருமானம் பற்றி செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசினார்.

பல திருமணம்

பல திருமணம்

எனது முதல் திருமணத்திற்கான உடையை மானவ் தான் வடிவமைக்க வேண்டும் என்று கங்கனா தெரிவித்தார். என்னது முதல் திருமணமா? அப்படி என்றால் பல முறை மணப்பீர்களா என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ஏன் கூடாது என்றார் கங்கனா. ஒரு திருமணம் நடக்கும்போது பல முறை திருமணம் நடக்கும் என நம்புவதாக தெரிவித்தார் கங்கனா.

பணம்

நான் 17 வயதில் இந்த துறைக்கு வந்தேன். எனக்கு பணம் சம்பாதிக்க, செலவு செய்ய பிடிக்கும். எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்பது எல்லாம் என் சகோதரிக்கு தான் தெரியும். அவர் தான் வரி செலுத்துவது, முதலீடு செய்வது, பண பரிமாற்றம் உள்ளிட்டவற்றை பார்த்து வருகிறார் என்று கங்கனா கூறினார்.

முதலீடு

முதலீடு

ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யப் பிடிக்கும் என்று கூறிய கங்கனாவுக்கு வீடு நிறைய குழந்தைகள் இருக்க வேண்டுமாம். ஒன்று, இரண்டு குழந்தையோடு நிறுத்திக் கொள்ளும் திட்டம் இல்லையாம். நடிகர்கள் ஆதித்யா பஞ்சோலி, அத்யாயன் சுமன் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோருடன் சேர்த்து கங்கனாவின் பெயர் அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
National Award-winning actress Kangana Ranaut, who has been romantically linked with actors like Aditya Pancholi, Adhyayan Suman and most recently Hrithik Roshan, says she has no qualms about getting hitched more than once.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more