»   »  'தெலுங்குப் படவுலகம் ரொம்ப மோசம்'.. ராதிகா ஆப்தே ஏன் இப்படிச் சொன்னார் தெரியுமா?

'தெலுங்குப் படவுலகம் ரொம்ப மோசம்'.. ராதிகா ஆப்தே ஏன் இப்படிச் சொன்னார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்குப் பட ஹீரோக்களைப் பற்றி எதிர்மறைக் கமெண்ட் அடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.

தோனி, அழகுராஜா படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இந்தி, தெலுங்கு என பல படங்களில் நடித்துவரும் ராதிகா ஆப்தே ஏற்கெனவே நிர்வாண செல்ஃபி மற்றும் ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாகத் தோன்றி பரபரப்பு கிளப்பியவர்.

இவரை கைது செய்யக் கோரி புகாரும் தரப்பட்டுள்ளது.

தெலுங்கு

தெலுங்கு

இந்த நிலையில் இவர் சமீபகாலமாக தெலுங்கு படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வருகிறார். தவிர தெலுங்கு பட நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பற்றி கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார்.

மோசம்

மோசம்

அவர் ஒரு பேட்டியில், "தெலுங்கு சினிமா நடிகர்கள், மற்றும் படத் தயாரிப்பாளர்கள் என சிலர் நல்லவர்களாக இல்லை. அங்கிருக்கும் பல நடிகர்கள், இயக்குநர்கள் பெண்களை மதிப்பதே இல்லை. ஆணாதிக்கம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. எனவே தான் தெலுங்கு சினிமா வாய்ப்புகளை தவிர்த்து வருகிறேன்," எனக் கூறியுள்ளார்.

கோபம்

கோபம்

இதனால் தெலுங்கு சினிமா உலகினர் ராதிகா அப்தே மீது கோபமடைந்துள்ளனர். மாதம் ஒருமுறை சர்ச்சை கிளப்பிவிடுவது இவரது வாடிக்கையாகிவிட்டது என மீடியா எழுத ஆரம்பித்துள்ளது.

ஏன் அப்படிச் சொன்னார்?

ஏன் அப்படிச் சொன்னார்?

ஆனால் ராதிகாவின் கோபத்தில் நியாயம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ராதிகா ஆப்தே தொடர்ந்து நிர்வாண சர்ச்சையில் சிக்கி வந்தததால் அவரை செக்ஸ் நடிகை என முத்திரை குத்தி, தவறான கண்ணோட்டத்தில் சிலர் அணுகியதாலேயே இப்படி அவர் கூறினாராம்.

English summary
Recently actress Radhika Apte has gave bad comments on Tollywood due to her personal experiences with few producers.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil