»   »  சமந்தாவைக் கழற்றிவிட கல்யாணம் தான் காரணமா?

சமந்தாவைக் கழற்றிவிட கல்யாணம் தான் காரணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெற்றிமாறனின் சுமார் 5 ஆண்டு தவ வாழ்க்கையின் பயனாக சென்ற வாரம் வடசென்னை ஷூட்டிங் தொடங்கியுள்ளது. தனுஷுக்காகவே இத்தனை ஆண்டுகால காத்திருப்பு. காத்திருப்புக்கு இடையே தான் விசாரணையை எடுத்துக் காட்டினார் வெற்றி.

வடசென்னை மற்ற புராஜக்ட் போன்றது அல்ல... சுமார் ஒன்றரை ஆண்டாவது உழைப்பு தேவைப்படும். அதனால் தான் கமிட்மெண்ட்கள் முடியும்வரை காத்திருந்தார் தனுஷ் என்கிறார்கள். இதோ இப்போது கூட கவுதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டாவை பாதியில் அம்போவென விட்டுவிட்டுத்தான் வடசென்னை பக்கம் வந்திருக்கிறார்.

Why Samantha removed from Vada Chennai?

இவ்வளவு பெரிய படத்தை ஹீரோயினால் நிறுத்த முடியுமா? அடுத்த ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வெற்றிமாறனும் தனுஷும் சமந்தாவைக் கழற்றிவிட்டதாக தகவல்கள் வருகின்றன.

எப்போது வேண்டுமானாலும் அதிகாரபூர்வ திருமண அறிவிப்பு வரலாம் என்ற நிலைமையில்தான் சமந்தா இருக்கிறார். எனவே திடீரென திருமண அறிவிப்பு வந்தால் அதனால் ஷூட்டிங் பாதிக்கப்படலாம். சமந்தா வாழ்க்கைப்படப் போவது பெரிய ஃபேமிலி. அங்கே பிரச்னை செய்துகொண்டிருக்க முடியாது. எனவே ஒரே வழி சமந்தாவைத் தூக்குவதுதான் என முடிவு செய்திருக்கிறார்கள்.

தனுஷின் ஆஸ்தான நடிகையாகி விட்ட அமலா பாலை வடசென்னைக்குள் இழுத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அமலாபால் திருமணம் ஆனவர்தான்.

வடசென்னை டீமின் முடிவு மற்றவர்களையும் பாதிக்குமே... அதனால் சமந்தா ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்.அதாவது காதலில் இருப்பது உண்மைதானாம். விரைவில் காதலன் யாரென அறிவிப்பாராம்.

ஆனால் திருமணம் இந்த ஆண்டு இல்லையாம்... சீக்கிரமா சொல்லும்மா தாயீ!

English summary
Why Samantha was removie from Dhanush's Vada Chennai movie? Here is the reason.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil