»   »  இன்னும் டைம் இருக்கு, நான் ஏன் 'அது' பற்றி மீடியாவிடம் பேச வேண்டும்?: சமந்தா

இன்னும் டைம் இருக்கு, நான் ஏன் 'அது' பற்றி மீடியாவிடம் பேச வேண்டும்?: சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலிப்பதை நடிகை சமந்தா ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் தனது திருமணம் குறித்து மீடியாவிடம் ஏன் பேச வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வருவதாக டோலிவுட்டும், கோலிவுட்டும் பேசியது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களோ அதை ஒப்புக் கொள்ளவில்லை. சமந்தாவை காதலிக்கிறீர்களா என்று சைதன்யாவிடம் கேட்டால் பதில் அளிக்க மாட்டார்.

சமந்தாவிடம் அதே கேள்வியை கேட்டால் அவரும் பதில் அளிக்க மாட்டார். இந்நிலையில் தான் முதன்முறையாக சமந்தா தனது காதலை ஒப்புக் கொண்டுள்ளார்.

காதல்

காதல்

நான் சையை(நாக சைதன்யா) காதலிக்கிறேன். எங்கள் திருமணம் நடக்க 3 மாதம் இருக்கும்போது தான் எங்கள் குடும்பத்தாருக்கே அது பற்றி தெரிய வரும் என சமந்தா தெரிவித்துள்ளார்.

திருமணம்

திருமணம்

நாங்கள் திருமணம் பற்றி யாரிடமும் பேசுவது இல்லை. இன்னும் நேரம் இருக்கும்போது நான் ஏன் திருமணம் குறித்து மீடியாவிடம் பேச வேண்டும்? என்று கேட்டுள்ளார் சமந்தா.

ஆசி

ஆசி

எங்களுக்கு பெற்றோரின் ஆசி உள்ளது. திருமணத்தை மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று சமந்தா கூறியுள்ளார். இதற்கிடையே சமந்தா புதுப் படங்களில் நடிக்காமல் உள்ளதற்கு கூறிய காரணம் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாக சைதன்யா

நாக சைதன்யா

தனக்கு அடுத்த ஆண்டு நிச்சயம் திருமணம் நடக்கும் என்றும், தேதியை தனது தந்தையும், நடிகருமான நாகர்ஜுனா அறிவிப்பார் என்றும் நாக சைதன்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். திருமணம் பற்றி தெரிவித்த பெண் சமந்தாவா என்பதை கூற மறுத்துவிட்டார்.

    English summary
    Samantha has accepted her love for actor Naga Chaitanya for the first time. She asked as to why should she talk about wedding to the media as time is there.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    X