For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தமிழச்சிகளுக்கு நோ சான்ஸ்... தமிழ் சினிமாவின் அவலம்!

  By Shankar
  |

  நயன்தாரா, ஹன்சிகா,காஜல் அகர்வால்,அனுஷ்கா, லட்சுமிமேனன், தமன்னா, எமி ஜாக்ஸன், ஆண்ட்ரியா இவர்கள்லாம் யார் யார் என்று கேட்டால் முன்னணி ஹீரோயின்கள் என சட்டென சொல்லிவிடுவீர்கள்.

  ப்ரியா ஆனந்த், ஸ்ரீஜா, ரித்விகா, ரூபா மஞ்சரி, ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி இவர்களை இந்த வரிசையில் சேர்ப்பீர்களா? சேர்க்க மாட்டோம். ஏனென்றால் இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு நடிகைகள். ஆமாம் தமிழ் பேசத் தெரிந்த, தமிழ் நாட்டில் பிறந்த தமிழச்சிகளுக்கு தமிழ் சினிமாவில் நாம் கொடுக்கும் இடம் இதுதான்.
  (சமந்தா, ஸ்ருதி, த்ரிஷா ஆகியோர் இதில் விதிவிலக்கு).

  Why Tamil Cinema ignoring Tamil heroines

  இன்னும் ஒரு டஜன் ஹீரோயின்கள் வடக்கு மற்றும் மற்ற மொழிகளில் இருந்து தமிழுக்கு அறிமுகமாக இருக்கின்றனர். இத்தனைக்கும் கோடம்பாக்கத்தில் நன்றாக நடிக்கும் திறமையும் சுண்டி இழுக்கும் அழகும் இருந்தும் கூட சரியான வாய்ப்பு கிடைக்காமல் முடங்கும் நடிகைகள் ஏராளம். ஏன் இந்த அந்நிய மோகம்?

  ஒரு ஷூட்டிங், அந்த படத்தின் ஹீரோயின் மும்பையில் இருந்து வந்து தமிழில் டாப் லெவலுக்கு வந்திருப்பவர். அவருக்கு தனியாக சகல வசதிகளும் கொண்ட கேரவன் கொடுக்கப்பட்டுள்ளது. நிமிடத்துக்கு நிமிடம் ஹீரோவுக்கு சமமான உபசரிப்பு.

  இன்னொரு பட ஷூட்டிங். தமிழ் நாட்டு ஹீரோயின் அவர். அவருக்கு கேரவன் கிடையாது. மும்பை நடிகைக்கு தரப்படும் உபசரிப்பில் பாதி கூட இவருக்கு இல்லை. இதுதான் தமிழ் சினிமா. ஐட்டம் பாடலில் குத்தாட்டம் போடுவதற்குத்தான் தமிழ் நடிகைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர்.

  தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நடிகையிடம் பேசினோம்...

  'உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு. இந்த மாதிரி பந்தா காமிக்கறதுக்காகவே வராத இங்கிலீஷையும் கத்துகிட்டு ஸீன் போடணும் போல... எல்லா இடங்கள்லயுமே தமிழ்ல பேசினா அதை மட்டமாத்தானே பார்க்கிறாங்க. அதே நிலைமைதான் சினிமாலயும். ஒரு குறிப்பிட்ட கேரக்டருக்கு இவங்கதான் சூட் ஆவாங்கனு போடறது தப்பில்லை. ஆனா நம்ம இண்டஸ்ட்ரில ஹீரோயின்னா நல்ல ஃபேரா இருக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க. நம்ம ஊர் பொண்ணுங்ககிட்ட அவ்ளோ கலரை எதிர்பார்க்க முடியாது. கொஞ்சம் மாநிறமா இருப்பாங்க. அதுதான் முக்கியமா மும்பை ஹீரோயின் மோகத்துக்கு காரணம்.

  அடுத்தது லுக்ஸ். இங்கே இருக்கற பொண்ணுக அதிகம் மாடர்ன் ட்ரெஸ் போட்டு பழகியிருக்க மாட்டாங்க. நான்லாம் பாவாடை தாவணி போட்டு ஊர்ல பல்லாங்குழி ஆடின பொண்னு. நார்த்லருந்து வர்றவங்க சின்ன வயசுலேருந்தே அல்ட்ரா மாடர்ன் ட்ரெஸ் போட்டு பழகியிருப்பாங்க. இது பெரிய வித்தியாசம். ஸோ, தமிழ் சினிமாவுக்கு வர்ற தமிழ் பொண்ணுக உடனே சினிமாவுக்குள்ள செட் ஆகறது கஷ்டமா இருக்கு. ஆனா சினிமாவுக்கு மொழி முக்கியம். ஒரு கேரக்டருக்கு சொல்ற டயலாக்கை நல்லா புரிஞ்சு, மனதளவுல உணர்ந்து பண்றது வேற, வெறும் மனப்பாடம் பண்ணிட்டு அப்பாடா...இந்த ஷாட்டை முடிச்சா போதும்பானு பண்றது வேற. இந்த வித்தியாசத்தை சாதாரண ரசிகனாலேயே கண்டுபிடிக்க முடியும். ஆன் த ஸ்பாட்ல கொடுக்கற டயலாக்கை கூட தமிழ் பொண்ணுகன்னா ஈஸியா பேசிடுவாங்க.''

  தமிழ் பொண்ணுகன்னா காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன்கற பிடிவாதம் இருக்கும் என்று சொல்வது உண்மையா?

  'அவங்கவங்களுக்குனு சுய விருப்பம் இருக்கு. அதுல யாரும் தலையிட முடியாது. எனக்கு இதுதான் லிமிட். இதுக்கு மேல போக மாட்டேன்னு சொல்றதுக்கு அவங்களுக்கு உரிமை இருக்குல்ல...? சில இடங்கள்ல படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி சொல்றது வேற. ஷூட்டிங்கப்ப இடையில வந்து நீங்க இப்படி பண்ணியே ஆகணும்னு மாத்தி சொல்றவங்க இருக்காங்க. ஹீரோயின்தானே நாம என்ன சொன்னாலும் கேட்டுத்தான் ஆகணும்கற மனோபாவம் இருக்கு. அது மாறணும். ஹீரோயின்களுக்கும் சுய விருப்பு, வெறுப்புகள் உண்டு.

  ஹீரோயின்கள் நிலைச்சு நிக்கறதுகறது என்னை பொறுத்தவரைக்கும் வர்ற வாய்ப்புகளை பொறுத்து தான். முதல் படம் தான் நான் தேடிப்போய் பண்ணின படம். மற்ற எல்லாமே என்னை தேடி வந்த படங்கள் தான்,'' என்றார்.

  இன்னொரு தமிழ் நடிகையிடம் கேட்டோம்...

  'இந்த விஷயத்தை பொறுத்தவரைக்கும் தமிழ் பொண்ணுக அதிகம் நடிக்க வர்றதில்லைனு தான் நினைக்கிறேன். சினிமான்னாலே சின்னதா பயப்படற மனநிலை இன்னமும் தமிழ்நாட்டுல இருக்கு. ஏன் வாய்ப்புகள் வரலைகறதுக்கு என்கிட்ட பதில் இல்லை. ஆனா கவனிக்கறதுல நான் எந்த பாகுபாடும் பார்த்தது இல்லை. தமிழ் பொண்ணுக முயற்சி பண்ணாம இருக்கலாம். எல்லாமே இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கையிலதான் இருக்கு,' என்று முடித்துக்கொண்டார்.

  தமிழ் பெண்கள் நடிக்க வருவதற்கு தயங்குகிறார்களா? 'ஆமா, எனக்கு சினிமா தான் பெரிய பேஷனா இருந்துச்சு. அதனால ரொம்ப ஆர்வமா இருந்தேன். ஆனா அப்பா, அம்மா ரொம்ப பயந்தாங்க. அய்யய்யோ...சினிமாவா? வேணாம்மானு. ஆனா அதையெல்லாம் மீறி நடிச்சு ஜெயிச்சுருக்கேன். இதே மாதிரி எத்தனை பொண்ணுக அப்பா, அம்மாகிட்ட சினிமாவை பத்தி நல்லவிதமா எடுத்து சொல்லி புரிய வெச்சு வர முடியும்னு தெரியலை,'' என்று முடித்தார்.

  சில மாதங்களுக்கு முன்பு ஒரு சினிமா மேடையில் விஜய்சேதுபதி முன்னிலையிலேயே இதை பற்றி ஆதங்கப்பட்டார் தமிழ் நடிகை ஸ்ரீஜா. இவர் கங்காரு, வந்தா மல படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். உடனே மைக்கை பிடித்த விஜய் சேதுபதி 'கண்டிப்பா நான் ஸ்ரீஜாவுக்கு வாய்ப்பு வாங்கித்தருகிறேன்' என்றார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து ஸ்ரீஜாவிடம் கேட்டோம். 'அடுத்த ஒரு வாரத்துல எனக்கு ஃபோன் பண்ணியே பேசினார். விரைவில் அவர் படத்துல நடிப்பேன்னு நம்புறேன்,' என்றார்.

  ஹலோ ஹீரோக்களே... தமிழச்சிகளையும் கண்டுக்குங்கப்பா...!

  English summary
  Why Tamil Cinema ignoring Tamil actresses and supporting other language heroines? Here are some facts.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X