»   »  அவங்களே வரும்போது உங்களுக்கென்ன நயன், த்ரிஷா?

அவங்களே வரும்போது உங்களுக்கென்ன நயன், த்ரிஷா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
த்ரிஷா, நயன்தாரா நக்ஷத்திரகாலை விழாவில் கலந்து கொள்ளவில்லை

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் பிரம்மாண்டமான நட்சத்திர விழா நடைபெற்றது. இதில் ரஜினி, கமல் இருவரும் கலந்துகொண்டனர்.

ரஜினி, கமல் இருவரும் மதியம் 3.30க்கு மைதானத்துக்குள் ஹெலிகாப்டரில் வந்து ராஜ கம்பீரத்துடன் இறங்கினார்கள். 3.30 மணியில் இருந்து நிகழ்ச்சி முடிவடைந்த 12 மணி வரை சுமார் 9 மணி நேரம் தங்களது பங்களிப்பைத் தந்தனர்.

Will Nadigar Sangam send notice to Ajith, Vijay, Nayan?

ரஜினி கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளை மிகுந்த ஆர்வத்துடன் ரசித்தார். விஷாலும் சிவகார்த்திகேயனும் போட்டி போட்டுக் கொண்டு ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தபோது செம ஸ்டைலாக நின்றபடி கைதட்டினார்.

அதேபோல் யோகிபாபு கால்பந்து விளையாண்டதையும் கண்டு ஆச்சர்யப்பட்டு கைதட்டி உற்சாகப்படுத்தினார். நடிகர் சங்க கட்டடம் கட்டுவதை தங்களது வாழ்நாள் சாதனையாக கருதுகிறார்களாம் ரஜினியும் கமலும். எனவேதான் விஷாலுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள்.

ஆனால் விஜய், அஜித் இருவரும் விழாவுக்கு வரவில்லை. நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா, அமலாபால், ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளும் மிஸ்ஸிங்.

ரஜினி, கமலே வரும்போதே உங்களுக்கென்ன? என்று கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என சங்க நிர்வாகிகளை உறுப்பினர்கள் வற்புறுத்த ஆரம்பித்துள்ளனர்.

English summary
The Members of Nadigar Sangam have urged the union bearers to take action on absented artsits in Malaysia function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X