»   »  எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த ஆளுடன் நடிக்க மாட்டேன்: நயன் அடம்

எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த ஆளுடன் நடிக்க மாட்டேன்: நயன் அடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தனை கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் சீயான் விக்ரமுடன் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாராம் நயன்தாரா.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. அவர் நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. இருப்பினும் அம்மணி சம்பள விஷயத்தில் மட்டும் கறாராக உள்ளார்.

நான் கேட்கும் சம்பளத்தை கொடுக்காவிட்டால் இடத்தை காலி செய்யுங்கள் என்று தில்லாக தயாரிப்பாளர்களிடம் கூறுகிறார்.

எப்படி?

எப்படி?

படம் ஓடாவிட்டாலும் நயன் எப்படி இப்படி கறாராக பேசுகிறார் என்று வியந்தால் அதற்கு ஹீரோக்கள் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. கொடுக்கும் கதாபாத்திரத்தை நச்சுன்னு நடித்துக் கொடுக்கும் நயன்தாராவை புக் செய்யுங்கள் என்று ஹீரோக்கள் அடம் பிடிப்பது தெரிந்து தான் அம்மணி தில்லாக உள்ளாராம்.

பேய்

பேய்

கோலிவுட் ரசிகர்களுக்கு பேய் படங்கள் பிடிக்கிறது என்பதை தெரிந்து கொண்ட நயன்தாரா பேயாட்டமும் போட்டுவிட்டார். அடுத்ததாக வித்தியாசமாக காமெடி செய்யும் எண்ணத்தில் உள்ளார்.

விக்ரம்

விக்ரம்

எத்தனை கோடி சம்பளம் கொடுத்தாலும் சரி சீயான் விக்ரம் ஜோடியாக மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று நயன் அடம்பிடிக்கிறாராம். சீயான் மேல் நயனுக்கு ஏன் இந்த கொலவெறி என்றால் அதற்கு ஒரு காரணம் உள்ளதாம்.

கள்வனின் காதலி

கள்வனின் காதலி

நயன்தாரா நடிக்க வந்த புதிதில் அவருக்கு விக்ரம் ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது அவர் எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக கள்வனின் காதலி படித்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

இமேஜ்

இமேஜ்

எஸ்.ஜே. சூர்யா போன்ற சின்ன ஹீரோவுடன் நடித்துவிட்டு என்னுடன் நடித்தால் என் இமேஜ் பாதிக்கும் அதனால் அந்த படத்தில் இருந்து விலகிவிடுங்கள் என்று விக்ரம் நயன்தாராவிடம் தெரிவித்தாராம். அதில் இருந்து நயன் விக்ரம் படத்தில் நடிக்க அழைத்தால் தெறித்து ஓடுகிறாராம்.

English summary
Buzz is that Nayanthara doesn't want to act with Vikram even if shet gets crores and crores of rupees as remuneration.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil