»   »  வேதாளம் தான் பர்ஸ்ட் & லாஸ்ட்... இனி யாருக்கும் நான் தங்கச்சி இல்லை... லட்சுமி மேனன் கறார்

வேதாளம் தான் பர்ஸ்ட் & லாஸ்ட்... இனி யாருக்கும் நான் தங்கச்சி இல்லை... லட்சுமி மேனன் கறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கை வேடத்தில் நடித்தாலும் முக்கியத்துவம் இருக்கும் என்பதைக் காட்டுவதற்காகவே வேதாளம் படத்தில் அஜித் தங்கையாக நடித்ததாகவும், இனிமேல் எந்த ஒரு ஹீரோவின் படத்திலும் அது போன்ற வேடத்தில் நடிக்க மாட்டேன் என்றும் நடிகை லட்சுமிமேனன் தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளவர் லட்சுமிமேனன். இவர் வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார்.

தற்போது ஜெயம் ரவி ஜோடியாக மிருதன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

முடிவு...

முடிவு...

இந்நிலையில், இனிமேல் கண்டிப்பாக தங்கையாக எந்த ஒரு ஹீரோவின் படத்திலும் நடிப்பதில்லை என லட்சுமிமேனன் முடிவெடுத்துள்ளாராம்.

தங்கை வேடம்...

தங்கை வேடம்...

வேதாளம் படத்தின் கதையை டைரக்டர் சிவா கூறியபோதே தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து கொண்டாராம் லட்சுமிமேனன்.

மூக்கை உடைக்க..

மூக்கை உடைக்க..

எனவே, தங்கை வேடத்தில் நடித்தால் முக்கியத்துவம் இருக்காது என்று சொல்பவர்களின் மூக்கை உடைப்பதற்காகத்தான் அந்த வேடத்தில் நடித்தாராம்.

முக்கியத்துவம்...

முக்கியத்துவம்...

தங்கை கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும் என அந்த ஒருபடத்தில் நிரூப்பித்து விட்டதால், இனி யாருக்கும் தங்கையாக நடிப்பதில்லை என அவர் முடிவெடுத்துள்ளாராம்.

நம்பிக்கை...

நம்பிக்கை...

தான் தங்கையாக நடித்த வேதாளம் படம் பெரிய வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள லட்சுமிமேனன், மிருதன் படமும் வெற்றி பெறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

டப்பிங் ஆசை...

டப்பிங் ஆசை...

அதோடு தற்போது தமிழ் பேசப் பழகி விட்டதால், அடுத்த படத்தில் டப்பிங் பேசும் ஆசையும் லட்சுமிமேனனுக்கு இருக்கிறதாம்.

English summary
Actress Lakshmi menon has said that she will not play sister role again.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil