»   »  இனிமேல் புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ள போவதில்லை- சமந்தா

இனிமேல் புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ள போவதில்லை- சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டோலிவுட், கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா இனிமேல் புதிய படங்களை ஒப்புக் கொள்ளப்போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

'தெறி', '24' என அடுத்தடுத்து 2 சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி நாயகிகளில் ஒருவராக சமந்தா உயர்ந்திருக்கிறார்.

இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான '24' திரைப்படம் உலகெங்கும் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது. இந்நிலையில் புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என சமந்தா கூறியிருப்பது அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Will not be Signing any New Films says Samantha

இதுகுறித்து அவர் '' இன்று இரவு நிம்மதியாகத் தூங்குவேன். இந்த கோடை காலத்தின் கடைசி படமும் வெளியாகி விட்டது. கடந்த 8 மாதங்களாக ஓய்வின்றி உழைத்து வந்தேன்.

அந்த நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன. சோர்வு காரணமாக என்னால் முடியாது என்னும் நிலை வந்தபோதும், அந்த இக்கட்டான நிலைமைகளை நான் சமாளித்து விட்டேன்.

இந்த 8 மாதங்களில் என்னால் ஒரு நல்ல மகளாக, தோழியாக இருக்க முடியவில்லை. இதனை சரிக்கட்ட இனிமேல் புதிய படங்கள் எதையும் நான் ஒப்புக் கொள்ள போவதில்லை.

இந்தக் கடுமையான நாட்களில் எனக்கு ஆதரவளித்த எனது குடும்பத்துக்கு நன்றி'' என்று கூறியிருக்கிறார். சமந்தாவின் இந்த அதிரடி முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    English summary
    After 2 Super Hit Movies now Samantha take a new Decision. She says ''Will not be Signing any New Films''.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil