»   »  அந்த நமீதா போனா என்ன.. இந்த நமீதா இருக்காங்களே...!

அந்த நமீதா போனா என்ன.. இந்த நமீதா இருக்காங்களே...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அது ஒரு "புயல்" காலம்.. வெள்ளித் திரை எங்கும் நமீதா வியாபித்திருந்த காலம்.. இப்போது அந்தப் புயல் எங்கே போனது என்றே தெரியவில்லை. ஆனால் இன்னொரு அழகுப் புயல் தமிழை தாலாட்ட வரப் போகிறது. வருகிறது என்று சொல்வதை விட ஏற்கனவே ஒரு சின்ன விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறது.. மீண்டும் ஒரு மெகா விஜயத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அவர்தான் நமீதா பிரமோத். சூரத்தெல்லாம் போக வேண்டியதில்லை இவரைப் பார்க்க. தோ... பக்கத்தில், கொச்சியில்தான் குடியிருக்கிறார்.

மலையாளத்தில் அழகழகான படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இந்த நமீதா அங்குள்ள இளம் தலைமுறை நடிகைகளில் சற்றே கவனிப்புக்குரியவராக வலம் வந்து கொண்டிருப்பவர்.

7வது படிச்சப்ப

7வது படிச்சப்ப

இவர் 7வது படித்துக் கொண்டிருந்தபோது டிவி சீரியல்காரர்கள் இவரைப் பார்த்து ஏம்மா நடிக்கிறியா என்று கேட்க, வீட்டில் உள்ளோர் ஓகே என்று கூறி நடிக்க அனுப்பி வைத்தனர். அப்படி நடிக்க வந்த முதல் சீரியல்தான் வேளாங்கண்ணி மாதாவு. அதில் மாதா கேரக்டரில் இவர் நடித்திருந்தார்.

அப்புறம்...

அப்புறம்...

வேளாங்கண்ணி மாதாவு சீரியல் நன்றாகப் போகவே அடுத்து அம்மே தேவி என்ற சீரியலிலும் அதைத் தொடர்ந்து என்ட மானசபுத்ரி என்ற சீரியலிலும் நடித்து மேலும் பிரபலமாகிப் போனார் நமீதா.

ஜம் ஜம் டிராபிக்

ஜம் ஜம் டிராபிக்

சீரியல் மூலம் கேரளத்து இல்லங்களை வசீகரித்த நமீதா நடித்த முதல் படம் டிராபிக். ரஹ்மான் - லீனா ஜோடியின் மகளாக இதில் நடித்திருந்தார். அருமையான நடிப்பையும் கொடுத்திருந்தார்.

மீனவப் பெண்ணே

மீனவப் பெண்ணே

புதிய தீரங்கள்தான் இவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. இதில் மீனவப் பெண்ணாக, முன்னணி நாயகன் நிவின் பாலியுடன் இணைந்து அசத்தியிருப்பார் நமீதா. இந்தப் படம் பெரிய ஹிட்டானது. நமீதா அலை அந்தப் படத்திலிருந்து ஸ்டார்ட் ஆனது.

4 நாளில் செம டான்ஸ்

4 நாளில் செம டான்ஸ்

இவருக்கு மோகினியாட்டம் தெரியாது. தெரியாதுன்னா சுத்தமாவே தெரியாதாம். ஆனால் நான்கு நாட்களில் அதை கற்றுக் கொண்டு புள்ளிபுலிகளும் ஆட்டின்குட்டியும் என்ற படத்தில் அப்படி ஒரு அசத்தலான பெர்மார்மென்ஸ் கொடுத்திருப்பார் நமீதா.

தமிழுக்கும் ஒரு சடர்ன் விசிட்

தமிழுக்கும் ஒரு சடர்ன் விசிட்

மலையாளத்தில் இப்படி பிரபலமாகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் தமிழில் அவருக்கு ஒரு வாய்ப்பு வந்தது. என் காதல் புதிது என்ற படத்தில் நடித்தார் நமீதா. ஆனால் படம் வெளிவரவே ரொம்ப லேட்டாகிப் போனது. இதனால் மீண்டும் மலையாளத்திலேயே தீவிரக் கவனம் செலுத்தி வந்தார்.

மீண்டும் வருவீங்களா நமீதா

மீண்டும் வருவீங்களா நமீதா

மலையாளத்தில் முன்னணி நாயகியாக வலம் வரும் நமீதா, மீண்டும் தமிழுக்கு வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக வந்தே தீருவார் என்று உள்ளுக்குள் ஒரு பட்சி சொல்கிறது.. பார்க்கலாம்!

English summary
"Massive" Namitha has gone, but will this Malayalam Namitha sizzle the silver screen in Tamil?
Please Wait while comments are loading...