»   »  வருண் மணியனுக்கு நேரம் ஒதுக்குவாரா த்ரிஷா?

வருண் மணியனுக்கு நேரம் ஒதுக்குவாரா த்ரிஷா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருண் மணியன் ஜெய்யை வைத்து தயாரிக்கும் படத்தில் நடிப்பதா, வேண்டாமா என்ற யோசனையில் உள்ளாராம் த்ரிஷா.

த்ரிஷாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியனுக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து த்ரிஷா பழையபடி நடிக்க சென்றுவிட்டார்.

புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜெய்

ஜெய்

ஜெய்யை ஹீரோவாக வைத்து சமர் இயக்கும் படத்தை வருண் மணியனின் ரேடியன்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கிறது.

த்ரிஷா

த்ரிஷா

வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் ஜெய் ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் நடிக்க த்ரிஷா இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பிசி

பிசி

த்ரிஷா பிற படங்களில் பிசியாக இருப்பதால் ஜெய் படத்தில் நடிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லையாம்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

சமர் தனது படத்தின் படப்பிடிப்பை வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க திட்டமிட்டுள்ளாராம். சென்னை மற்றும் கும்பகோணத்தில் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஜான் விஜய், சோனியா அகர்வால் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர்.

English summary
According to sources, Trisha is yet to give green signal to act with Jai in the movie to be produced by her fiancee Varun Manian.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil