»   »  இதோ பாருங்கள்.. இந்திரா காந்தியாக மாறப் போகும் நம்ம வித்யா பாலனைப் பாருங்கள்!

இதோ பாருங்கள்.. இந்திரா காந்தியாக மாறப் போகும் நம்ம வித்யா பாலனைப் பாருங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டில் கான்கள் மற்றும் கபூர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நேரத்தில் பெண்கள் எங்களாலும் முடியும் என்று நிரூபித்தவர் வித்யா பாலன்.

அதிரடியான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி ஹீரோக்களை அதிர வைத்தவர் வித்யா பாலன். இவரது டர்ட்டி பிக்சர்ஸ் ஒரு உதாரணம் போதும்.

இத்தனைக்கும் தமிழில் நடிக்க லாயக்கற்றவர் என நிராகரிக்கப்பட்டு இந்தி சினிமா உலகில் இடம் பிடித்தவர் வித்யா.

நம்பர் ஒன் ஸ்டார்

நம்பர் ஒன் ஸ்டார்

இன்றைய பாலிவுட் நம்பர் 1 நடிகைகளில் வித்யாவும் ஒருவர். "தி டர்ட்டி பிக்சர்", "கஹானி" படங்களின் மூலம் தன்னை லேடி சூப்பர் ஸ்டாராக நிரூபித்தவர்.

சேலையிலும் கிளாமர்

சேலையிலும் கிளாமர்

என்னதான் கிளாமராக நடித்தாலும் வெளியில் எப்போதும் அழகாக புடைவையில் ஜொலிப்பவர். நடிப்பிலும் சக்கை போடு போடுபவர் வித்யா பாலன்.

இந்திராவின் வாழ்க்கை வரலாறு

இந்திராவின் வாழ்க்கை வரலாறு

அவர் தற்போது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் படத்தில் இந்திரா காந்தியாக நடிக்க இருக்கிறாராம்.

20 கோடி சம்பளமாம்

20 கோடி சம்பளமாம்

இந்தப் படத்தில் நடிப்பதற்காக வித்யாவிற்கு 15லிருந்து 20 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அசத்துங்க வித்யா!

புடவைக்குப் பெயர் போன இந்திரா

புடவைக்குப் பெயர் போன இந்திரா

இந்திரா காந்தி புடவைக்குப் பெயர் போனவர். அவரது ஸ்டைலும், கம்பீரமும் அந்த புடவையில் அழகாக பளிச்சிடும். வித்யாவும் சேலையில்தான் செம அழகாக இருப்பார். இப்போது இந்திரா வேடத்தில் நடிக்கப் போகும் அவர் கூடுதல் பொலிவு பெறுவார் என நம்பலாம்.

English summary
After her not-so-successful release, ‘Hamari Adhuri Kahani’, Vidya Balan is reportedly going to play former prime minister Indira Gandhi in a biopic directed by ‘Rahasya’ filmmaker, Manish Gupta.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil