»   »  'பெண்கள் இன்று வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்றுதான்!' – நடிகை சினேகா

'பெண்கள் இன்று வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்றுதான்!' – நடிகை சினேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெண்கள் இன்று வெளியே சென்று சாதிப்பது சவாலான விஷயமாகிவிட்டது என்று நடிகை சினேகா கூறினார்.

அழகுக் கலை நிறுவனமான வி கேர் நிறுவனத்தின் 'வி கேர்ஸ் குளோபல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஹோம் சயின்ஸ்' நடத்திய பட்டமளிப்பு விழாவில் நடிகை சினேகாவும், வி கேர் நிறுவனத்தின் நிறுவநர் டாக்டர் இ கரோலின் பிரபா ரெட்டியும் கலந்துகொண்டார்.

Women facing lot of challenges to achieve - Actress Sneha

அழகுக் கலை சம்பந்தப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்ற 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பட்டமளிக்கப்பட்டது.

விழாவில் சினேகா பேசுகையில், "வி கேர் கரோலின் பிரபா அவர்களை எனக்கு 7 வருடங்களாகத் தெரியும். அவருடைய உழைப்பு மிகப்பெரியது.

இந்நிறுவனத்தின் 10 வது வருட பட்டமளிப்பு விழாவில் பங்குபெறுவதில் மிக்க மகிழ்ச்சி. எல்லாத் துறைகளும் பெண்களுக்கு சவாலான துறைதான். எந்த துறைக்குச் சென்றாலும், பெண்கள் சவால்களை சமாளித்துதான் முன்னேற முடியும்.

அழகுக் கலை நிபுணர்கள் மருத்துவர்களுக்கு நிகரானவர்கள். அழகுக் கலை நிபுணர்கள் கையில் அதிக திறமை உள்ளது. அவர்கள் நினைத்தால் இந்த உலகத்தையே அழகாக மாற்ற முடியும்.

இங்கே கற்றுக்கொடுத்த அனைத்து விஷயங்களையும் நீங்கள் சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். சினிமா நடிகைகள் மட்டும்தான் அழகாக இருக்க முடியும் என்ற காலம் மாறிவிட்டது. இப்போது நீங்கள் நினைத்தால் உலகத்தில் உள்ள அனைவரும் அழகாகலாம்.

நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை சரியான வழியில் பயன்படுத்தி உதவிட வேண்டும்," என்றார்.

Read more about: care, sneha, சினேகா
English summary
Actress Sneha says that in present situation women are facing many challenges to achieve something.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil