»   »  அஜீத் ஜோடியாக நடிப்பேனா?: மச்சினி ஷாமிலி விளக்கம்

அஜீத் ஜோடியாக நடிப்பேனா?: மச்சினி ஷாமிலி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் எனக்கு அண்ணன் போன்றவர் அதனால் அவருக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என ஷாமிலி தெரிவித்துள்ளார்.

அஜீத்தின் மச்சினி ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகை ஒரு கலக்கு கலக்கியவர். தற்போது அவர் ஹீரோயினாகிவிட்டார்.

Won't act as Ajith's lady love: Shamili

2009ம் ஆண்டு வெளியான ஓயே தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார் ஷாமிலி. சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் அவர் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்த வீர சிவாஜி படம் கடந்த 16ம் தேதி ரிலீஸானது.

இந்நிலையில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் ஏற்பீர்களா என்று ஷாமிலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,

அஜீத் எனக்கு அண்ணன் போன்றவர். அவருக்கு ஜோடியாக நிச்சயம் நடிக்க மாட்டேன். அவர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் ஏற்பேன் என்றார்.

English summary
Ajith's sister-in-law Shamili said that she will never ever act as Thala's lady love as she considers him as a brother.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil