»   »  முடியாது, முடியாதுன்னா முடியாதுதான்.. ஹன்சிகாவின் பிடிவாதம்.. ஏன் ஏன் ஏன்?

முடியாது, முடியாதுன்னா முடியாதுதான்.. ஹன்சிகாவின் பிடிவாதம்.. ஏன் ஏன் ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது படத்தை குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டும் என்பதால், முத்தக்காட்சிகளில் நடிப்பதில்லை என தான் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகை ஹன்சிகா.

பெரும்பாலான நடிகைகள் தங்களது மார்க்கெட்டைத் தக்கவைத்துக் கொள்ள கையிலெடுக்கும் ஆயுதம் ‘கவர்ச்சி'. புதுமுக கதாநாயகிகள் பலர் முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடனேயே படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவதாகக் கூட கூறப்படுவதுண்டு.

ஆனால், சில நடிகைகள் இவற்றில் இருந்து விதி விலக்காக திறமையை நம்பி மட்டுமே களமிறங்குவதுண்டு. அவர்களில் முக்கியமானவர் ஹன்சிகா.

கை நிறைய படங்கள்...

கை நிறைய படங்கள்...

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.

வாலு ... உயிரே உயிரே

வாலு ... உயிரே உயிரே

தமிழில் சிம்புவுடன் ‘வாலு', ‘வேட்டை மன்னன்', ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்', விஜய் ஜோடியாக ‘புலி', ஜெயப்பிரதா மகன் சித்து ஜோடியாக ‘உயிரே உயிரே' போன்ற படங்களில் நடிக்கிறார்.

அடுத்தடுத்து ரிலீஸ்...

அடுத்தடுத்து ரிலீஸ்...

இவற்றில் ‘வாலு', ‘உயிரே உயிரே', ‘ரோமியோ ஜூலியட்' பட வேலைகள் முடிவடைந்து ஒன்றன்பின் ஒன்றாக ரிலீசாக இருக்கின்றன.

நோ முத்தக்காட்சி...

நோ முத்தக்காட்சி...

இந்நிலையில், இவர் தனது படங்களில் கவர்ச்சியாக நடித்தாலும், முத்தக்காட்சிகளில் மட்டும் நடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

குடும்பத்தோடு ரசிக்க...

குடும்பத்தோடு ரசிக்க...

இது தொடர்பாக பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘எனது படங்களைக் குடும்பத்துடன் பார்க்க வருவதால், முத்தக் காட்சிகளைத் தவிர்க்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Hansika has said that she will not act in kissing scenes in films.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil