»   »  ஹிருத்திக் ஜோடியான யாமி கௌதம்... குத்தாட்டம் போட சம்மதிப்பாரா சன்னி லியோன்

ஹிருத்திக் ஜோடியான யாமி கௌதம்... குத்தாட்டம் போட சம்மதிப்பாரா சன்னி லியோன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் புதிய படத்தில் யாமி கௌதம் நாயகியாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்தில் சன்னிலியோனை ஒரு பாட்டுக்கு ஆட வைக்க முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தற்போது மொகஞ்சதாரோ எனும் பிரமாண்ட படத்தில் நடித்து வருகிறார். இதைதொடர்ந்து அவர் நடிக்கும் படத்தை ராகேஷ் ரோஷன் தயாரிப்பில் சஞ்சய் குப்தா இயக்கவுள்ளார்.

Yami Gautam ‘excited’ to work with Hrithik

காபில் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக யாமி கவுதம் நடிக்கவுள்ளார். இவர் தமிழில் ஜெய் ஜோடியாக ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்' எனும் படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே சில பாலிவும் படங்களிலும் நடித்துள்ளார் யாமி.

ஹிருத்திக் உடன் ஜோடி சேர்வது பற்றி கூறியுள்ள யாமி, இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றும், இன்னம் தன்னால் நம்பமுடியவில்லை என்றும், தனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளதாகவும் யாமி கவுதம் கூறியுள்ளார்.

காபில் படம் ரொமண்டிக் த்ரில்லர் படமாக உருவாகவுள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. காபில் படத்தில் சன்னி லியோனை ஒரு பாட்டுக்கு ஆட வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சன்னி லியோன் ஆடப்போவது குறித்து கூறியுள்ள ராகேஷ் ரோஷன், அவர் இன்னும் சம்மதம் சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.

English summary
Actress Yami Gautam, who will star alongside Hrithik Roshan in upcoming film “Kaabil”, says she is nervous yet excited to share the screen space with the actor whose work has inspired her a lot.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil