»   »  தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்க மறுக்கும் நடிகை யாமி கௌதம்

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்க மறுக்கும் நடிகை யாமி கௌதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை யாமி கௌதம் பாலிவுட்டில் கவனம் செலுத்துவதற்காக டோலிவுட், கோலிவுட் மற்றும் சாண்டல்வுட் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறாராம்.

கௌரவம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை யாமி கௌதம். விக்கி டோனார் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான யாமிக்கு அங்கு நல்ல கிராக்கி உள்ளது. அதே சமயம் தமிழ், தெலுங்கு, கன்னட திரை உலகிலும் அவருக்கு மவுசு உள்ளது. இதனால் பல தயாரிப்பாளர்கள் அவரை அணுகி நடிக்க கேட்டால் கிடைக்கும் ஒரே பதில் முடியாது என்பது தான்.

Yami takes a break from South

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், ரவி தேஜா ஆகியோரின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை கூட ஏற்க யாமி மறுத்துவிட்டாராம். அவரவர் பட வாய்ப்பு கிடைக்க மாட்டேன் என்கிறதே என்ற கவலையில் இருக்கையில் யாமி ஏன் இப்படி செய்கிறார் என்று நினைக்கிறீர்களா?

அவர் இந்த ஆண்டு பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளாராம். அதனால் பிற மொழி படங்களில் நடிக்க மறுத்து வருகிறார். அவர் நடித்துள்ள பத்லாபூர் இந்தி படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸாக உள்ளது.

அவர் தற்போது ஆக்ரா கா தாப்ரா, ஜுனூனியாத் ஆகிய இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

English summary
Yami Gautham is refusing to act in Tamil, Telugu, Kannada movies to concentrate in Bollywood.
Please Wait while comments are loading...