»   »  தமிழ் வழியாக கன்னடத்துக்கு..

தமிழ் வழியாக கன்னடத்துக்கு..

Subscribe to Oneindia Tamil

இந்தித் திரையுலகின் மன்மதராணி யானா குப்தா, மன்மதன் படத்தில் குத்தாட்டம் மூலம் தமிழுக்குள் நுழைந்தார்.

இப்போது அப்படியே கன்னடத்தில் காலடி எடுத்து வைக்கிறார்.

மன்மதன் படத்தின் மூலம் ஏராளமான மும்பை பிகர்களை கோலிவுட்டுக்குக் கூட்டி வந்தார். கவர்ச்சிகரமான கிரிக்கெட் வர்ணனையாளர் மந்திராபேடி, யானா குப்தா முதல் மாடலிங் அழகுப் புயல்கள் எல்லாம் மன்மதனுக்காக சென்னையில் மையம் கொண்டனர்.

படத்தில் ஜோதிகாவைத் தவிர வேறு யாருக்கும் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. எல்லோரும் ஒரு பாடலுக்கு கவர்ச்சி காட்டி விட்டு, எஸ் ஆனார்கள்.

கிடைத்த கொஞ்ச நேர வாய்ப்பிலும் யானா குப்தா தனது கவர்ச்சித் திறமையைக் காட்டி, ரசிகர்களை கிறங்கடித்தார். யார் இந்த யானா குப்தாஎன்பவர்களுக்காக நமது டேட்டா பேஸ்ஸிருந்து ஒரு பிளாஸ்பேக்.

செக்கோஸ்லோவாகியா நாட்டவர் யானா குப்தா. 16 வயதில் மாடலிங்கில் குதித்தார். சத்யா குப்தா என்ற இந்தியரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டதால், இந்தியாவில் வந்து செட்டிலாகி விட்டார்.

கல்யாணம் ஆன பின்பும் மாடலிங்கை நிறுத்தவில்லை. அப்படி ஒரு நிகழ்ச்சியில் யானா தனது திறமையைக் காட்ட பாலிவுட் இவரை அள்ளிக் கொண்டது.தொடர்ந்து இந்தி சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இது தெரிந்து சிம்பு மன்மதன் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார். துட்டு கொடுத்தால் எந்த மொழியாக இருந்தால் என்ன என்ற கொள்கையை உடையயானாவும் ஒத்துக்கொண்டார். யானா தமிழுக்கு வந்த கதை இதுதான்.

இப்போது மன்மதன் படத்தில் யானா குப்தாவின் ஆட்டத்தைப் பார்த்து தமிழ் ரசிகர்கள் சொக்கிப் போய் இருக்கிறார்கள்.

அதற்குள் யானாவின் புகழ் கன்னடத்திற்குப் பரவி அங்கும் அவரை குத்தாட்டம் போடக் கூப்பிட்டிருக்கிறார்கள். சிவராஜ் குமார் நடிக்கும் ஜோகிபடத்தில் யானா குப்தாவின் கவர்ச்சியாட்டம் இடம் பெறுகிறதாம்.

கவர்ச்சிக்கு மொழியேது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil