மலைப்பாம்பை கழுத்தில் போட்டு ஜாலியாக போஸ் கொடுத்த யாஷிகா...பதறும் ரசிகர்கள்

சென்னை : பெரிய மலைப்பாம்பை கழுத்தில் போட்டு கூலாக போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த். இதைப் பார்த்து ரசிகர்கள் பதறிப் போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிரபல மாடலாக இருந்த யாஷிகா ஆனந்த் படங்களில் சிறிய ரோல்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்த கொண்ட பிறகு மிகவும் பிரபலமாகி விட்ட யாஷிகாவிற்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் இரண்டாவது நாயகியாகவும் நடித்து வந்தார்.

கவர்ச்சி போட்டோஷுட்டால் பிரபலம்

கவர்ச்சி போட்டோஷுட்டால் பிரபலம்

இன்ஸ்டாகிராமில் தாறுமாறாக கவர்ச்சி காட்டிய போட்டோஷுட்களை விடாமல் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வந்தார் யாஷிகா. இதனால் எஸ்.ஜே.சூர்யாவுடன் கடமையை செய் உள்ளிட்ட படங்களில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் படங்களிலும் பிஸியானார் யாஷிகா.

மீண்டும் படங்களில் பிஸி

மீண்டும் படங்களில் பிஸி

கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கிய யாஷிகா, மிக மோசமாக காயமடைந்து, நடக்க முடியாமல் படுத்த படுக்கையானார். தொடர் சிகிச்சைக்கு பிறகு தற்போது மீண்டு வந்துள்ள யாஷிகா, சல்ஃபர், கடமையை செய், இவன் தான் உத்தமன், ராஜ பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 5-ல் கெஸ்டாகவும் கலந்து கொண்டார்.

கழுத்தில் மலைப்பாம்புடன் யாஷிகா

கழுத்தில் மலைப்பாம்புடன் யாஷிகா

விபத்திற்கு பிறகு மீண்டும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாகி உள்ள யாஷிகா, மஞ்சள் நிற பெரிய மலைப்பாம்பை கழுத்தில் தூக்கி போட்டுக் கொண்டு, அசால்டாக, கூலாக சிரித்த படி போஸ் கொடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடு, Life is full of snakes என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய், ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாம்புன்னு யாரை சொல்றீங்க

பாம்புன்னு யாரை சொல்றீங்க

யாஷிகாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், யாஷிகா வித் அரேபியன் அனகோண்டா. Life full of snakes ஆ..நிறைய பாம்பு பார்த்து இருக்கீங்களோ. லைஃப் ஃபுல்லா பாம்புகள்னா...புரியல. யார சொல்றீங்க என பல விதங்களில் கமெண்ட் செய்திருக்கிறார்கள். ஆனால் யாஷிகா வெளியிட்ட பாம்பு வீடியோ வேகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X