Don't Miss!
- News
மோடி ஆவணப்படம் vs காஷ்மீர் ஃபைல்ஸ்..இடதுசாரி, பாஜக மாணவர்களால் ஹைதராபாத் பல்கலையில் டென்ஷன்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Sports
விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அந்த இடத்திலா பியர்சிங் பண்ணுவாங்க.. கதறி அழுத யாஷிகா ஆனந்த்.. டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் பியர்சிங் பண்ணும் வீடியோவில் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு கலங்கியபடி இருக்கும் வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
கார் விபத்துக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் கால்களில் ஏகப்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேலும், ஒரு வலியை தரக்கூடிய விஷயத்தை ஏன் செய்றீங்க யாஷிகா என ரசிகர்கள் அக்கறையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கொஞ்சம்
கூட
பயமே
இல்லை..
பறக்கும்
விமானத்தில்
இருந்து
கீழே
குதித்த
பிரபல
நடிகை..
த்ரில்
வீடியோ!

வொண்டர் உமன்
டின்னர் பார்ட்டி ஒன்றுக்காக பாண்டிச்சேரி வரை சென்று விட்டு திரும்பிய நிலையில், ஈசிஆர் சாலையில் எதிர்பாராத விதமாக நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளானதில் அவருடைய தோழி பரிதாபமாக உயிரிழந்தார். யாஷிகாவுக்கும் உடல் முழுக்க பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். உடலில் உள்ள காயங்கள் ஆறிய நிலையில், தான் ஒரு வொண்டர் உமன் என்பதை நிரூபிக்கும் விதமாக வொண்டர் உமன் காஸ்ட்யூம் அணிந்து கொண்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் பாராட்டுக்களை அள்ளின.

செம கிளாமராக
மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய நடிகை யாஷிகா ஆனந்த் தனது ஃபேவரைட் ரூட்டான கிளாமர் பக்கம் பழையபடி டோட்டலாக திரும்பி விட்டார். படு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு அடிக்கடி போட்டோஷூட்களை நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

அந்த இடத்தில் பியர்சிங்
வழக்கமாக காதின் அடிப்பகுதியில் தான் அனைவரும் காது குத்தி கம்மல் போடுவார்கள். ஆனால், யாஷிகா ஆனந்த் சற்றே வித்தியாசமாக காதின் நடுப்பகுதியில் கன் ஷாட் மூலம் பியர்சிங் போட்டுள்ள வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளார்.
கண் கலங்கிடுச்சு
காது குத்தினாலே செம வழி எடுக்கும். அதுவும் காதுக்கு நடுப்பகுதியில் கன் ஷாட் மூலம் ஓட்டைப் போட்டு கம்மல் போட்டால் எப்படி இருக்கும், கண்ணெல்லாம் சிவந்து கலங்கிட்டாரு யாஷிகா ஆனந்த். அதை மறைக்கும் விதமாக ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என கேப்ஷன் கொடுத்து சமாளிக்க முயற்சி செய்துள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து வசனம்
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் சொல்லும் டபுள் மீனிங் வசனத்தை போட்டு அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் லைக் போட்டுள்ளனர். எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் யாஷிகா ஆனந்த் நடித்து வரும் கடமை செய் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.