For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கார் விபத்து நிஜமாவே இப்படி தான் நடந்தது.. கண்ணீர்மல்க உண்மையை போட்டு உடைத்த யாஷிகா ஆனந்த்!

  |

  சென்னை: தன்னுடைய கார் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

  Recommended Video

  Yashika Anand First EXCLUSIVE statement | 5 மாசம் நடக்க முடியாது | Balaji Murugadoss

  பிக்பாஸ் பிரபலமும், கோலிவுட் நடிகையுமான யாஷிகா ஆனந்த், கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார். கடந்த ஜூலை 24 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளானது.

  இதில் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் பலத்த காயமடைந்தனர். அவரது தோழியான வள்ளி செட்டி பவானி உயிரிழந்தார்.

  சினேகன் மனைவிக்கு இவங்க கொடுத்த கல்யாண பரிச பாருங்க... மகிழ்ச்சியில் கன்னிகா சினேகன் மனைவிக்கு இவங்க கொடுத்த கல்யாண பரிச பாருங்க... மகிழ்ச்சியில் கன்னிகா

  பத்து நாட்களுக்குப் பிறகும், இந்தச் சம்பவம் குறித்த பதிவுகளும் மற்றும் விபத்துக்கு முன்பு யாஷிகா வாகனம் ஓட்டும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர், சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு தொலைப்பேசி மூலம் பேட்டி அளித்துள்ளார் யாஷிகா. அதில் அவர் கடந்த சில நாட்களில் தனக்கு என்னவெல்லாம் நடந்தது என்பதை விளக்கமாக கூறியுள்ளார்.

  யார் இந்த பவானி

  யார் இந்த பவானி

  பவானி எனக்கு சிறந்த தோழி. ஆறு வருட பழக்கம்; ஆரம்பத்தில் மாடலாக இருந்த பவானி, பின்னர் வெளிநாட்டிற்கு சென்று என்ஜினீயரிங் சார்ந்த வேலையை பார்த்து வந்தார். ஆனால், அவள் இந்த வருடம் ஹைதராபாத்தில் தன் பெற்றோருடன் நேரத்தை செலவிட விரும்பி இந்தியா வந்தாள். பிறகு தான் என்னைப் பார்க்க சென்னைக்கு வந்தாள்.

  என்ன நடந்தது அன்று இரவு?

  என்ன நடந்தது அன்று இரவு?

  "ஜூலை 24 அன்று சனிக்கிழமை நாங்கள் நான்கு பேர் இரவு உணவை சாப்பிட ஈசிஆரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்குச் சென்றோம். இரவு 11 மணியளவில் நாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறி, ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம், அப்போதுதான் விபத்து நடந்தது. நான் தான் என் டாடா ஹாரியரை ஓட்டி வந்தேன், ஆனால் நான் நிச்சயமாக வேகமாக ஒட்டவில்லை"என்று கூறியுள்ளார்.

  பின் விபத்து எப்படி?

  பின் விபத்து எப்படி?

  தொடர்ந்து பேசிய யாஷிகா ஆனந்த், உண்மையில் அன்று சாலை இருட்டாக இருந்தது. துரதிருஷ்டவசமாக நான் காரை சாலையில் நடுவே இருந்த டிவைடர் மீது மோதினேன். மோதிய வேகத்தில் கார் வேகமாக நகர்ந்து பின்னர் மூன்று முறை கவிழ்ந்தது. பவானி எனது நண்பர்களுடன் சேர்ந்து பின் இருக்கையில் அமர்ந்து இருந்தார். ஆனால் அவள் சீட் பெல்ட்டை அணியவில்லை, ஜன்னல் திறந்திருந்தது. விபத்து நடந்தபோது, ​​அவள் திறந்த ஜன்னலில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.. எஞ்சியவர்கள் காருக்குள் இருந்தோம், ஆனால் கதவுகள் அடைபட்டன.. பின்பு நாங்கள் sunroof-பை உடைத்து தான் வெளியே வந்தோம் என்று தெரிவித்துள்ளார்.

  பெரிய கூட்டமே கூடியது

  பெரிய கூட்டமே கூடியது

  மேலும் அவர் கூறுகையில், "விபத்து நடந்த சில நிமிடங்களில், ஒரு பெரிய கூட்டமே கூடியது. என்னால் எழுந்து நிற்க கூட முடியவில்லை, என் உடல் முழுவதும் செயலிழந்து போனது போல் உணர்ந்தேன். பின்னர் நாங்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டோம். நான் குணமடைந்த போது தான், பவானி இறந்துவிட்டதாக செய்தி கிடைத்தது" என்று உருக்கமாக கூறியுள்ளார்.

  குடிபோதையில் கார் ஒட்டவில்லை

  குடிபோதையில் கார் ஒட்டவில்லை

  யாஷிகா தொடர்ந்து பேசுகையில், "நான் இங்கு ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன், நான் குடிபோதையில் கார் ஒட்டவில்லை அதே சமயம் எந்த போதையும் இல்லை; எந்த விதமான மருந்துகளையும் பயன்படுத்தவில்லை, இது முற்றிலும் ஒரு துரதிருஷ்டவசமான விபத்து. கவனக்குறைவு காரணமாக ஒரு நொடியில் நடந்த ஒரு துயர சம்பவம். அதற்காக, நான் முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன்.

  இதை ஏற்றுக்கொள்ள முடியாது

  இதை ஏற்றுக்கொள்ள முடியாது

  ஆனால் சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி சொல்லப்பட்ட அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அர்த்தமல்ல. நான் குடிபோதையில் வாகனம் ஓட்டினேன் என்று கூறி மக்கள் மத்தியில் பரவும் ஒரு போலி வீடியோ கூட உள்ளது. அதே சமயம், மற்றொரு பிக் பாஸ் போட்டியாளருடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மற்றொரு விபத்துக்காக மற்றவர்கள் என்னை குற்றம் சாட்டி, என்னை இந்த சீரியல் வில்லியாக மாற்றுகிறார்கள். இது சுத்த பைத்தியகாரத்தனம்.

  ஆறு மாதங்கள் என்னால் இது முடியாது

  ஆறு மாதங்கள் என்னால் இது முடியாது

  நான் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன், எனக்கு பல எலும்பு முறிவுகள் உள்ளன, அதாவது என்னால் சுமார் ஆறு மாதங்கள் எழுந்து நிற்கவோ சரியாக நடக்கவோ முடியாது. எனது தையல்களால் என்னால் சரியாக அழ முடியவில்லை. நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குழப்பத்தில் உள்ளேன், இதிலிருந்து எப்படியாவது மீண்டு வர முயற்சிக்க நான் PTSD ஆலோசனையில் கலந்து கொள்ளப் போகிறேன். எல்லாவற்றையும் விளக்கும் ஒரு வீடியோவை ஆன்லைனில் வெளியிட விரும்பினேன், ஆனால் நான் பேசுவதை பதிவு செய்ய முடியவில்லை. இந்த நேரத்தில் என்னால் செய்ய முடிந்ததெல்லாம் பவானியை நினைப்பதும், அவள் இருந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசிப்பதுதான்.

  பட வாய்ப்புகளை இழக்கப் போகிறேன்

  பட வாய்ப்புகளை இழக்கப் போகிறேன்

  நான் ஏற்கனவே நடித்த படங்களைத் தவிர, இந்த சம்பவத்திற்குப் பிறகு நான் நிறைய பட வாய்ப்புகளை இழக்கப் போகிறேன் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் மக்களிடையே நிறைய வெறுப்பு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறேன், ஆனால் அது பவானியின் குடும்பத்தை பாதிக்காதவாறு இருக்க விரும்புகிறேன். இது மிகவும் உணர்ச்சிகரமான நேரம், மேலும் பல வதந்திகள் பல வழிகளில் என்னை புண்படுத்தும் என்பதை அறிவேன், ஆனால் இவையெல்லாம் காலப்போக்கில் மறைந்து விடும் என்று நம்புகிறேன். மேலும் பவானி வானில் இருந்து என்னைப் பார்த்து, ஒருநாள் மன்னிப்பார் என்று நம்புகிறேன்.. இவ்வாறு யாஷிகா ஆனந்த் தனது பேட்டியில் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

  English summary
  Bigg Boss Fame and Tamil Actress Yashika Aannand Explained the true version of how the accident happened in a special interview.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X