For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என் வாழ்க்கையில் இனிமே அந்த தப்பை மட்டும் பண்ணவே மாட்டேன்.. புதிய சபதம் எடுத்த யாஷிகா ஆனந்த்!

  |

  சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் டபுள் மீனிங் வசனத்தை பேசி பிரபலமான யாஷிகா ஆனந்த், அதே வேகத்தில் பிக் பாஸ் சீசன் 2விலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

  சினிமாவில் லீடு ரோலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், நண்பர்களுடன் டின்னருக்கு சென்று விட்டு அதிவேகமாக கார் ஓட்டி வந்த யாஷிகா எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார்.

  அந்த விபத்தில், தனது ஆருயிர் தோழியை பறிகொடுத்தது அவரது வாழ்வில் எப்போதுமே மறக்க முடியாத வடுவாக மாறியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் சாட் செய்த யாஷிகா சொன்ன ஒரு விஷயம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

  'ஜெய்பீம்’ ரொம்ப பிடிக்கும்.. சமந்தாவின் நடிப்பு சூப்பர்.. அட வானதி சீனிவாசன் இப்படியொரு ரசிகையா?'ஜெய்பீம்’ ரொம்ப பிடிக்கும்.. சமந்தாவின் நடிப்பு சூப்பர்.. அட வானதி சீனிவாசன் இப்படியொரு ரசிகையா?

  மீண்ட யாஷிகா

  மீண்ட யாஷிகா

  அந்த விபத்தில் யாஷிகா ஆனந்துக்கும் மிகப்பெரிய அடி பட்டது. காலில் பல தையல்கள் போடப்பட்டு, எழுந்து நடப்பாரோ மாட்டாரோ என பலரும் பயந்த நிலையில், மூன்று மாத தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பழையபடி தனது சினிமா படப்பிடிப்பு வேலைகளில் பிசியாகி உள்ளார். ரசிகர்களும் பழையபடி யாஷிகாவை பார்த்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  கிளாமர் போட்டோஷூட்

  கிளாமர் போட்டோஷூட்

  சமூக வலைதளங்களில் யாஷிகா ஆனந்த் ரசிகர்களை கவர அடிக்கடி படுகவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். உடல் நலம் சீரான நிலையில், தற்போது மீண்டும் ஏகப்பட்ட போட்டோஷூட்களை நடத்தி கவர்ச்சி பொங்க போட்டோக்களை போட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

  ரசிகர்களுடன் சாட்

  ரசிகர்களுடன் சாட்

  நடிகைகள் எப்போதுமே ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க அடிக்கடி ஆஸ்க் மி எனிதிங் போன்ற கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில், கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் சில நேரத்தில் சர்ச்சைகளையும், சில நேரத்தில் ஆச்சர்யத்தையும் கிளப்பும், இந்நிலையில், யாஷிகா சொல்லியிருக்கும் ஒரு பதில் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

  சத்தியமா செய்யமாட்டேன்

  சத்தியமா செய்யமாட்டேன்

  நடிகை யாஷிகா ஆனந்திடம் சூப்பரான ராயல் என்ஃபீல்ட் பைக் ஒன்று உள்ளது. ஒரு ரசிகர், அந்த பைக்கை இப்போ உங்களால் ஓட்ட முடிகிறதா? என கேட்டதற்கு பதில் அளித்த யாஷிகா ஆனந்த், அந்த பைக் இப்போ வீட்டில் தான் இருக்கிறது. என் சகோதரர் அந்த பைக்கை பயன்படுத்தி வருகிறார். மேலும், இனிமேல், என் வாழ்நாளில் பைக் மற்றும் கார் ஓட்டப் போவதில்லை என்கிற முடிவை எடுத்திருக்கிறேன் என்றும் யாஷிகா கூறியுள்ளார்.

  Recommended Video

  இடையழகை காட்டி கவர்ச்சி நடனமாடிய யாஷிகா - வீடியோ
  ரசிகர்கள் ஷாக்

  ரசிகர்கள் ஷாக்

  விபத்துக்கு பிறகு நடிகை யாஷிகா ஆனந்த் சொந்தமாக டிரைவ் செய்வதையே தவிர்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ரசிகர்கள், நல்ல முடிவு யாஷிகா, எப்போதுமே சேஃப் ஆக இருங்கள் என கமெண்ட் அடித்துள்ளனர். எஸ்.ஜே. சூர்யாவின் கடமையை செய் படத்தில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், சல்பர் உள்ளிட்ட சில படங்களிலும் கமிட் ஆகி உள்ளார்.

  English summary
  Yashika Anand replied to a fan who asking about her Royal Endfield bike. Replying to the question, Yashika stated, "That bike is at home. My brother is using it now. Not only that. The important thing is that I have decided not to drive a car and bike anymore."
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X