»   »  ஆமா.. இப்ப நான் சிங்கிள்தான்... சந்தோஷமா இருக்கேன்!- த்ரிஷா

ஆமா.. இப்ப நான் சிங்கிள்தான்... சந்தோஷமா இருக்கேன்!- த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆமாம், நான் இப்போது சிங்கிள்தான். சந்தோஷமாக இருக்கிறேன். இனி யூகமாக எதையும் பேச, எழுத வேண்டாம், என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

வருண் மணியனுடன் நிச்சயமாகி, திடீரென அது ரத்துமாகிவிட்டது த்ரிஷாவுக்கு. இது பற்றிய செய்திகள்தான் கடந்த இரு வாரங்களாக மீடியாக்களில் போதும் போதும் எனும் அளவுக்கு வெளியாகிக் கொண்டிருக்கிறது.

ஏகப்பட்ட படங்கள்

ஏகப்பட்ட படங்கள்

ஆனால் த்ரிஷாவோ இதுபற்றி கவலைப்படாமல், புதுப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். தமிழில் எந்த முன்னணி நடிகைக்கும் வராத அளவுக்கு பெரிய வாய்ப்புகள் அவருக்கு வருகின்றன.

அம்மாவும்

அம்மாவும்

இந்த திருமண ரத்தை த்ரிஷாவின் அம்மாவும் உறுதிப்படுத்திவிட்டார். விருப்பமில்லாத திருமணத்தைச் செய்து கொண்டு எதற்காக மனம் வருந்த வேண்டும்? என்று அவர் கேட்டிருந்தார்.

முதல் முறை

முதல் முறை

இந்த நிலையில், இதுவரை அமைதியாக இருந்து வந்த த்ரிஷா திருமணம் ரத்தானதை வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரில்

ட்விட்டரில், "வெளியாகிக் கொண்டிருக்கும் பல்வேறு யூகச் செய்திகள் போதும். ஆமாம், நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். போதும் விட்டுவிடுங்கள்... தனியாக இருப்பதில் சந்தோஷமாக இருக்கிறேன். நன்றி, என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமண ரத்து குறித்து முதல் முறையாக த்ரிஷா ஒப்புக் கொண்டுள்ளதால், இனி யூகத்துக்கு இடமில்லை. ஃபுல் ஸ்டாப்!

English summary
Now Trisha finally opened on the break up and made following tweet.‘Amused by d hazaar speculations doin d rounds.Let it rest people.Happy,single n thankful’ Trisha Krishnan ‏trishtrashers
Please Wait while comments are loading...