»   »  தேன், யோகா.. அனுஷ்கா!

தேன், யோகா.. அனுஷ்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Anushka
தேனும், யோகாவும் தான் தனது 'சிக்' அழகுக்கு முக்கியக் காரணம் என்கிறார் 'ரெண்டு' அனுஷ்கா.

மாதவன் நடித்த ரெண்டு படத்தில் ரீமா சென் தவிர அழகு அனுஷ்காவும் ஒரு நாயகியாக நடித்திருந்தார். அவர் வட்டாரம் படத்திலேயே நாயகியாக நடித்திருக்க வேண்டியது. ஆனால் திடீரென சரண் ரிஜக்ட் செய்து விட்டதால், ரெண்டு படத்தில் 2வது நாயகியானார்.

ஆனால் அதன் பின்னர் தமிழுக்கு குட்பை சொல்லி விட்டு தெலுங்குக்குப் போய் விட்டார் அனுஷ்கா. சமீபத்தில் கூட அவரை தமிழுக்குக் கூப்பிட்டுப் பார்த்தனர். லேது நைனா, நேனு இப்புடு தெலுங்குலு பிசி என்று கூறி வந்த வாய்ப்புகளை நிராகரித்து விட்டாராம் அனுஷ்கா.

அதை விடுங்க, அனுஷ்காவின் சிக் அழகு ரகசியத்ைத அவரே போட்டு உடைத்துள்ளார்.

தினசரி தவறாமல் யோகா செய்வாராம் அனுஷ்கா. அது அவருக்கு உடல் மற்றும் மனப் புத்துணர்ச்சிக்கு ரொம்பவே கை கொடுக்கிறதாம். அதுதவிர தினசரி தோல் மினுமினுப்புக்காக தேன் பயன்படுத்துகிறாராம்.

தினசரி பிரெட்டில் தேனைத் தடவி அதைத்தான் சாப்பிடுகிறாராம். இதன் மூலம் தோல் மினுமினுப்பாவதோடு, உடல் அழகும், வலுப்பெறுவதாக கூறுகிறார் அனுஷ்கா.

அதை எப்படி தயாரிப்பது என்பதையும் அனுஷ்காவே விளக்குகிறார். முதலில் பிரட்டை சிறு சிறு மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டுமாம். பிறகு அதில், தேனைத் தடவி சாப்பிட வேண்டுமாம் (அடடே)

தினசரி தேன் சாப்பிடுங்க, தவறாமல் யோகா பண்ணுங்க, என்னைப் போல பளபளன்னு மின்னுங்க என்று சக நடிகைகளுக்கும் அட்வைஸ் செய்கிறாராம் அனுஷ்கா. தான் போகும் யோகா கிளாஸுக்கே போங்க என்று அட்ரஸையும் கூடவே கொடுக்கிறாராம்.

ஆனால் யோகா குறித்து அனுஷ்கா கூறுவது, அவர் போய்க் கொண்டிருக்கும் யோகா கிளப்பின் விளம்பர உத்தி என்று சிலர் முனுமுனுக்கிறார்கள். அனுஷ்கா மூலம் தங்களது கிளப்புக்கு அவர்கள் ஆள் பிடிப்பதாகவும் முனுமுனுப்பு உள்ளது.

ஏற்கனவே தெலுங்குத் திரையுலகின் மகா ராணி இலியானா சில காலங்களுக்கு முன்பு தேன் 'பிரசாரத்தில்' ஈடுபட்டிருந்தார். பின்னர் அதை விட்டு விட்டார். தற்போது அனுஷ்கா ஆரம்பித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil