»   »  கோலிவுட்டில் வாரிசு நடிகைக்கு போட்டியா ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்?

கோலிவுட்டில் வாரிசு நடிகைக்கு போட்டியா ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கோலிவுட் நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கும் ஜீவியின் 100 % காதலி- வீடியோ

சென்னை: முதல் படம் ரிலீஸாவதற்குள்ளேயே ஜீவா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஷாலினி பாண்டே. சயீஷா சைகலுக்கு போட்டியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ஷாலினி பாண்டே. தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படம் மூலம் நடிகையானார்.

முதல் படத்திலேயே ஏகத்திற்கும் பிரபலமாகிவிட்டார்.

100% காதல்

100% காதல்

ஜி.வி. பிரகாஷ் குமாருடன் சேர்ந்து 100% காதல் படத்தில் நடித்துள்ளார் ஷாலினி. இந்த படம் ரிலீஸாவதற்குள் ஜீவா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜானகி

ஜானகி

நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியில் வி.என். ஜானகியாக நடிக்கிறார் ஷாலினி. ஜானகி எம்.ஜி.ஆரின் மனைவி ஆவார்.

மவுசு

மவுசு

டோலிவுட் மட்டும் அல்ல கோலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஷாலினி. ஷாலினியை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இளம் ஹீரோக்கள் ஆவலாக உள்ளனர்.

கோலிவுட்

கோலிவுட்

வனமகன் படம் மூலம் கோலிவுட் வந்த வாரிசு நடிகையான சயீஷாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன. அதே போன்று ஷாலினிக்கும் வாய்ப்புகள் வருகிறது. சயீஷாவுக்கு சரியான போட்டிக்கு ஆள் வந்தாச்சு என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

English summary
Buzz is that there is going to be tough competition between Arjun Reddy fame Shalini Pandey and dancing sensation Sayeesha Saigal. Both are getting lot of offers in Kollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X