»   »  இப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்: நடிகை ஜரீன் கான்

இப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்: நடிகை ஜரீன் கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ஜரின் கான் தான் குண்டாக இருக்கையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தான் குண்டாக இருந்ததை நினைத்து வெட்கப்படவில்லை என்று பெருமையாக தெரிவித்து ரசிகர்களிடம் பாராட்டு பெற்றுள்ளார்.

சல்மான் கானின் வீர் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் ஜரீன் கான். மும்பையை சேர்ந்த அவர் நடிக்க வரும் முன்பு குண்டாக இருந்துள்ளார். நடிக்கும் ஆசை ஏற்பட்டதும் ஜிம்மிற்கு சென்று மாங்கு மாங்குன்னு ஒர்க் அவுட் செய்து உடல் எடையை குறைத்துவிட்டார்.

ஜரீன் கான் பார்க்க நடிகை கத்ரீனா கைஃப் போன்று உள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட்

பாலிவுட்

குச்சி குச்சியாக இருக்கும் பாலிவுட் நடிகைகள் மத்தியில் பூசினாற் போன்று வலம் வந்த ஜரீன் கான் தனது உடல் எடையை மேலும் குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட்டார். இருப்பினும் அவர் தான் குண்டாக இருந்ததை மறைக்க விரும்பவில்லை.

ஜரீன் கான்

ஜரீன் கான்

ஜரீன் கான் தான் 9 மற்றும் 12ம் வகுப்பு படிக்கையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஜரீன் கானா இது என்று கேட்கும் அளவுக்கு அந்த புகைப்படங்களில் குண்டாக உள்ளார். ஆனால் அதை நினைத்து அவர் கவலைப்படவில்லை.

பெருமை

பெருமை

நான் குண்டாக இருக்கும் புகைப்படங்களை பார்க்கையில் பெருமையாக உள்ளது. நான் குண்டாக இருக்கையில் என் எடை பற்றிய மக்களின் கருத்துகளை நான் கண்டுகொண்டது இல்லை. ஏன் என்றால் இது என் வாழ்க்கை என்று தெரிவித்துள்ளார் ஜரீன்.

உடல் எடை

உடல் எடை

ஒல்லியானால் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ஒரு நாள் முடிவு செய்தேன். அதன் பிறகு உடல் எடையை குறைக்கும் பயணத்தை துவங்கினேன். முன்பை விட தற்போது அதிக உற்சாகமாக உள்ளேன். பாலிவுட் வந்த பிறகு என் வெயிட்டே போச்சு என்று ஜரீன் கூறியுள்ளார்.

பெண் புலி

எடையை குறைத்ததால் என் உடலில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உள்ளது. அதை வெட்கப்பட்டு மறைக்க விரும்பவில்லை. கோடுகளையுடைய பெண் புலி போன்று உணர்கிறேன். ஃபிட்டாக இருப்பது மிகவும் பிடித்துள்ளது என்கிறார் ஜரீன்.

English summary
Bollywood actress Zarine Khan is not ashamed of the fact that she was hefty earlier.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil