twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பைடரை மிஞ்சும் 'அயர்ன் மேன்'!

    By Staff
    |

    Iron Man
    ஒவ்வொரு சம்மர் சீஸனிலும் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பட்டையைக் கிளப்பும். பேட் மேன், இன்க்ரிடிபிள் மேன், சூப்பர் மேன், எக்ஸ் மென் வரிசையில் இப்போது 'அயர்ன் மேன்'.

    மார்வல் காமிக்ஸ் எனும் தலைப்பில் வெளியான காமிக்ஸ் கதையின் அடிப்படையில் உருவான இந்தப் படத்தின் கதாநாயகன் ராபர்ட் டௌனி ஜூனியர். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படத்தின் மூன்றுநாள் வசூல் மட்டும் ரூ.400 கோடி!.

    வட அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் இந்தப் படம் வசூலில் பெரும் சாதனைப் புரிந்திருக்கிறது.

    ஆரம்ப நாள் புக்கிங் வேகத்தைப் பார்த்து ரூ. 200 கோடிவரை இப்படம் வசூல் செய்யும் என்று கணித்தவர்கள், இப்போது பிரமித்துப் போயிருக்கிறார்கள்.

    மூன்றே நாளில் ரூ.405.39 கோடிகளை அள்ளியுள்ள இப்படம், பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் சக்கைப் போடு போடுகிறதாம். இந்தப் படத்தின் மொத்த செலவு சுமார் ரூ.550 கோடிகள். இப்போதே கிட்டத்தட்ட அந்தத் தொகையை வசூல் செய்துவிட்டது இந்தப் படம்.

    உலகமெகும் 4,025 திரையரங்குகளில் 8,700 ஸ்கிரீன்களில் வெளியாகியுள்ள அயர்ன்மேன், வசூலில் இப்போது ஸ்பைடர்மேனுக்கு அடுத்தபடியாக வந்துள்ளது.

    வரும் வாரங்களில் ஸ்பைடர் மேனையும் மிஞ்சும் என்று எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மத்தியில் இப்படத்துக்கு ஏக வரவேற்பாம். இதுவரை படம் பார்த்தவர்களில் 68 சதவிகிதம் பெண்கள்தான் என்று பாரமவுண்ட் மற்றும் சோனி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    அயர்ன் மேனை உருவாக்கிய மார்வல் ஸ்டுடியோ நிறுவனத்துக்கு இதுதான் முதல்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X