twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹாலிவுட்டில் ஜாக்சன் உடல் அடக்கம்!

    By Staff
    |

    Forest lawn cemetery
    ஹாலிவுட் ஹில்ஸ் கல்லறை வளாகத்திலேயே மைக்கேல் ஜாக்சனின் உடலை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒருமனதாக தீர்மானித்துள்ளனராம்.

    ஜாக்சன் இறந்து கிட்டத்தட்ட 6 வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் அவரது உடல் நிரந்தரமாக அடக்கம் செய்யப்படாமல் உள்ளது. தற்காலிக கல்லறையில்தான் அவரது உடலை வைத்துள்ளனர்.

    ஜாக்சன் உடலை அடக்கம் செய்யும் இடத்தை முடிவு செய்வதில் அவரது குடும்பத்தினரிடையே இரு வேறு கருத்துக்கள் இருந்தன.

    அண்ணன் ஜெர்மைன் ஜாக்சன், ஜாக்சனின் நெவர்லேன்ட் பண்ணை இல்ல வளாகத்திலேயே உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இதற்கு ஜாக்சனின் தாயார் காத்தரீன் ஒத்துக் கொள்ளவில்லை.

    2005ம் ஆண்டு சிறார்களுடன் பாலியல் தொடர்புகளை வைத்துக் கொண்டதாக ஜாக்சன் மீது பெரும் வழக்கு தொடரப்பட்டது. இதனால் நெவர்லேன்ட் இல்லத்தை விட்டு விலகியிருந்தார் ஜாக்சன். அந்த இல்லத்திற்குப் போகவே அவர் விரும்பாமல் இருந்தார். எனவே அந்த இடத்தி்ல ஜாக்சனை அடக்கம் செய்யக் கூடாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

    இதனால் குடும்பத்தினரிடையே இடத்தை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது காத்தரீன் கருத்தை ஏற்றுக் கொள்வது என்ற முடிவுக்கு குடும்பத்தினர் வந்துள்ளனர்.

    இதையடுத்து ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் உள்ள பாரஸ்ட் லான் நினைவுப் பூங்கா என்ற கல்லறை வளாகத்தில் ஜாக்சனின் உடலை நிரந்தரமாக அடக்கம் செய்யவுள்ளனர்.

    இங்கு உடலை அடக்கம் செய்வது தொடர்பான விண்ணப்பம் கொடுக்கப்பட்டு விட்டதாம். இதையடுத்து ஜாக்சனின் உடலை இங்கு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் பாரஸ்ட் லான் கல்லறை நிர்வாகம் இறங்கியுள்ளது.

    பாரஸ்ட் லான் பகுதியில்தான் பல்வேறு ஹாலிவுட் பிரபலங்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஜாக்சனின் பாட்டியைக் கூட 1990ம் ஆண்டு இங்குதான் அடக்கம் செய்தனர்.

    இதற்கிடையே, ஜாக்சனின் உடலில் 3வது முறையாக பிரேதப் பரிசோதனை செய்ய முடியுமா என்று அவரது தாயார் காத்தரீன், லாஸ் ஏஞ்சலெஸ் துணை மருத்துவ அதிகாரி டாக்டர் பால் லினெக்கியிடம் கோரினாராம்.

    ஆனால், ஏற்கனவே 2 முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதால், அவரது உடல் கிட்டத்தட்ட குத்திக் குதறப்பட்டதைப் போலாகி விட்டது. அவரது உடல் உறுப்புகள் கிட்டத்தட்ட கலந்து போய் விட்டன. எது எது எந்தப் பகுதி என்று தெரியாத அளவுக்கு சதைக் கோளங்கள் கலந்து போய் விட்டன. எனவே 3வது பிரேதப் பரிசோதனைக்கு வாய்ப்பில்லை என்று கூறி விட்டாராம் லினெக்கி.

    இதுகுறித்து லினெக்கி கூறுகையில், கிட்டத்தட்ட ஜாக்சனின் உடலை துண்டு துண்டாக வெட்டி எடுத்து விட்டார்கள். 2 முறை பிரேதப் பரிசோதனை செய்ததால் உடல் உறுப்புகள் சிதிலமடைந்து போய் விட்டன. இன்னொரு சோதனைக்கு ஏற்ற நிலையில் உடல் இல்லை என்றார்.

    நெவர்லேன்ட் இடம் மாறுகிறது..

    இதற்கிடையே, ஜாக்சனின் நெவர்லேன்ட் பண்ணை வீட்டை அப்படியே இடம் மாற்றி லாஸ் வேகாஸுக்குக் கொண்டு போகப் போகிறார்களாம்.

    நெவர்லேன்ட் வீட்டில் உள்ள அசையும் பொருட்களை பெயர்த்தெடுத்து அதை லாஸ் வேகாஸ் கொண்டு சென்று அங்கு அதை பொருத்தி, பிரமாண்ட சுற்றுலாத் தலம் போல அமைக்கவுள்ளனராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X