twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டெக்சாஸ் அழகி மிஸ். அமெரிக்கா!

    By Staff
    |

    Crystle Stewart
    அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான கிறிஸ்டைல் ஸ்டூவர்ட், மிஸ் அமெரிக்கா 2008 ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் மிஸ் அமெரிக்கா 2008 அழகிப் போட்டி நடந்தது. இதில் டெக்ஸாஸைச் சேர்ந்த 26 வயதாகும் இளம் தொழிலதிபரன கிறிஸ்டைல் ஸ்டூவர்ட், மிஸ் அமெரிக்காவாக தேர்வு செய்யப்பட்டார்.

    50க்கும் மேற்பட்டோர் போட்டியிட்ட இந்த அழகிப் போட்டியில் கிறிஸ்டைல் வெற்றி பெற்றுள்ளார்.

    டெக்ஸாஸ் மாகாணத்தின் மிசெளரி நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டைல். அங்கு விருந்துகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் நிறுவனம் மற்றும் தன்னம்பிக்கையூட்டும் பேச்சுப் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஒன்றை நடத்தி வருகிறார். மாடல் அழகியாகவும் இருக்கிறார்.

    அழகிப் போட்டியில் முதல் ரன்னராக லியா லேவியானோவும், இரண்டாவது ரன்னராக டிப்பானி அன்ட்ரேடும் தேர்வு செய்யப்பட்டனர்.

    வெற்றி பெற்ற கிறிஸ்டைலுக்கு 2007ம் ஆண்டு மிஸ் அமெரிக்கவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராச்சல் ஸ்மித் முடி சூட்டினார்.

    தனது வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கிறிஸ்டைல், இளம் பெண்கள் தன்னம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் செயல்பட வேண்டும். திறமையாக பேச கற்றுக் கொள்ள வேண்டும். எனக்குக் கிடைத்துள்ள புதிய அந்தஸ்தைக் கொண்டு இதை அமெரிக்காவின் இளம் பெண்களிடம் கொண்டு சேர்ப்பேன் என்றார்.

    கருப்பர் இனத்தைச் சேர்ந்தவரான கிறிஸ்டைல், இந்த அழகிப் பட்டம் தனது தன்னம்பிக்கையை மேலும் கூட்ட இது உதவும் என்றார்.

    57 ஆண்டு கால மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டி வரலாற்றில், கருப்பர் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகிப் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    வியட்நாமில் வருகிற ஜூலை மாதம் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கிறிஸ்டைல் கலந்து கொள்வார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X