For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இந்த வருடம் பேய்களின் வருடம்

  By Manjula
  |

  லாஸ் ஏஞ்செல்ஸ்: இந்த வருஷம் மொத்தமா 14 பேய்ப் படங்கள் வரிசை காட்டி வந்து உங்க தூக்கத்தை மொத்தமா கெடுக்கப் போகுது பாஸ் என்னது வரவர பேய்ப் படமெல்லாம் காமெடியா மாறிடுச்சா இந்தப் படமெல்லாம் பாத்திங்கன்னா பல ராத்திரி உங்க தூக்கமெல்லாம் பறிபோய்டும்,முன்ன மாதிரி ஒரு கதவு சத்தம் போடுறது அது வழிய பேய் லைட்டா எட்டி பாக்குறது எல்லாத்தையும் ஈவில் டேட் மாதிரியான படங்கள் வந்து மாத்திடுச்சி.

  இப்போ வரப் போற பேய் படமெல்லாம் எப்படி மக்களை பயப் பட வைக்குறதுன்னு ரூம் போட்டு யோசிச்சு எடுத்த படங்கள் ஸோ எல்லா படமுமே ஒவ்வொன்னு ஒவ்வொரு மாதிரி வித்தியாசமா இருந்தாலும் உங்களை பயப் பட வைக்கப் போறதுலஎல்லாப் படமுமே ஒரே வகைதான்.

  ஹாலிவுட் படங்களோட வித்தியாசமான சவுண்ட் எபக்ட்ஸ் அப்புறம் மியூசிக் எல்லாமே இந்த மாதிரி படங்களுக்குன்னே ஸ்பெஷல்லா அமைஞ்சிடும் எல்லாம் நம்ம நேரம்னு மனசத் தேத்திட்டு படத்தப் பார்த்தா ஒரு ரெண்டு மூணு நாளைக்கு யாரப்பார்த்தாலும் படத்துல வந்த பேய் மாதிரியே இருக்கும் அதனால படத்தப் பாத்துட்டு பயந்திடாதிங்க. படம் வர்றதுக்கு லேட்டாகுதேன்னுயோசிக்கிறவங்க ஏற்கனவே வெளிவந்திருக்கிற படத்தோட டிரைலர பார்த்து பயப்பட்டுக்கங்க, ஏதோ என்னால முடிஞ்சது.

   கிரிம்சன் பீக்

  கிரிம்சன் பீக்

  அக்டோபர் மாசம் வெளிவர்ற இந்தப் படத்த தொலைநோக்கு இயக்குனர் கில்லர்மோ டெல் டோரோ இயக்கி இருக்கிறார் பெரிய நட்சத்திரங்களான தாம் ஹிடேல்ஸ்டன் மற்றும் ஜெசிகா சஸ்டின் நடிச்சிருக்காங்க, கதை 19 ம் நூற்றாண்டில் நடப்பது
  போல உள்ளது இங்கிலாந்தின் கிராமப் புறங்களில் ஒரு இளம் நாவலாசிரியர் மற்றும் அவரது கணவர் ஆகியோரை வைத்து கதை அமைக்கப் பட்டுள்ளது.

  இன்சிடியஸ் சேப்டர் 3

  இன்சிடியஸ் சேப்டர் 3

  முதல் இரண்டு படங்களின் தொடர்ச்சியாக இந்த மூன்றாவது படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் லெய்க் வானேல் கதை என்னவெனில் ஒரு இளம்பெண்ணிற்கு உதவும் பொருட்டு இறந்து போன தன் ஆன்மாவை பயன்படுத்தும் ஒரு வயதானபெண்மணி அதனால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிக் கூறுகிறது படம் முதல் இரண்டு படங்களை விட இது திகிலாக இருக்குமாம் இந்த வருடம் ஜூன் மாதம் வெளிவர இருக்கிறது படம்.

  சின்சிஸ்ட்டர் 2

  சின்சிஸ்ட்டர் 2

  முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த இரண்டாம் பாகம் ஆகஸ்ட் மாதம் வரவிருக்கிறது இந்த இரண்டாம் பாகம் வேடிக்கையாக இருக்குமாம், ஒரு அம்மாவும் அவரோட ரெட்டைக் குழந்தைகளும் கிராமத்தில உள்ள பாழடைஞ்ச வீட்டிற்கு போறாங்கமரணத்தைத் தேடி அவங்க போறாங்களா அப்படிங்கிறத தியேட்டர்ல போய் பாருங்க.

  பேராநார்மல் ஆக்டிவிட்டி தி கோஸ்ட் டைமென்சன்

  பேராநார்மல் ஆக்டிவிட்டி தி கோஸ்ட் டைமென்சன்

  அக்டோபர் மாசம் வர இருக்கிற இந்தப் படத்தில ஒரு குடும்பம் அமெரிக்காவில இருந்து கலிபோர்னியா போறாங்க அங்க அவங்க சந்திக்கிற பிரச்சினைகள் தான் கதை..

   வாடிகன் டேப்ஸ்

  வாடிகன் டேப்ஸ்

  அதே அக்டோபர் மாசம் வரவிருக்கிற இன்னொரு படம் வாடிகன் டேப்ஸ் வாடிகன் நகரத்தில உள்ள ஒரு இளம்பெண் மேல ஆவி இருக்குது அதனால அந்த நகரமும் அங்கு இருக்குறவங்களும் எப்படிப் பாதிக்கப் படறாங்க அப்படிகிங்கிறது தான் கதை.

   பிபோர் ஐ வோக்

  பிபோர் ஐ வோக்

  ஒரு சின்ன பையனுக்கு அவன் கனவில என்ன நினைச்சாலும் நடக்கிற சக்தி கிடைக்குது அவனோட வளர்ப்பு பெற்றோர்கள் அவனை எப்படி சமாளிக்கிறாங்க இதுதான் கதை படம் செப்டம்பர்ல வெளிவர இருக்குது.

  தி விசிட்

  தி விசிட்

  ஒரு தம்பதியினர் தங்களோட குழந்தையோட போய் வயசான தாத்தா பாட்டிய பாக்க போறாங்க போற இடத்துல அவங்க என்னென்ன பிரச்சினைகளை அந்த ஒரு இரவில சந்திக்கிறாங்க அப்படிங்கிறதுதான் கதை படம் செப்டம்பர்ல ரிலீஸ் ஆகுது.

  தி கேலோஸ்

  தி கேலோஸ்

  20 வருடங்களுக்கு முன்னால ஒரு ஸ்கூல் பங்க்ஷன்ல விபத்து ஒன்னு ஏற்படுது அதில சார்லிங்கிற பையன் இறந்து போயிடுறான் 20 வருசத்துக்கு அப்புறம் அதே மாதிரி ஒரு நிகழ்ச்சிய நடத்துரப்ப அந்த நிகழ்ச்சி மீண்டும் தடைபடுது நிகழ்ச்சிய மாணவர்கள் நடத்தினாங்களா இல்லையா அதிலிருந்து அவங்க எப்படி மீண்டு வராங்க இந்த மாதிரி போகுது கதை படம் ஜூலை மாதம் ரிலிஸ் ஆகுது.

  தி வார்ம்

  தி வார்ம்

  ஒரு சிறுமிய அவங்க அப்பா ஒரு புது ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுறாரு அங்க அவ ரொம்ப கஷ்டப்படுறா பத்தாதுக்கு அங்க ஏற்கனவே இறந்து போன ஒரு பையன பத்தி எல்லாரும் திரும்பத் திரும்ப சொல்ல அவளுக்கு ரொம்ப பயம்மாயிடுது அந்தப் பையன் எப்படி இறந்தான் அதுக்கு யார் காரணமானவங்கன்னு கண்டுபிடிக்கிறதுதான் மிச்சக் கதை அக்டோபர் மாசம் படம் ரிலீசாகுது.

  அமிதி வில்லே தி அவேக்னிங்

  அமிதி வில்லே தி அவேக்னிங்

  ஒரு அம்மாவும் அவங்களோட மூணு குழந்தைகளும் வேற ஒரு வீட்டுக்கு இடம் பெயர்ந்து போறப்ப ஏற்படுற திகில் அனுபவங்கள் தான் கதை படம் ஆகஸ்ட் மாசம் வெளியாகுது

  கிரம்பாஸ்

  கிரம்பாஸ்

  ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில நகரத்தில நடக்கிற மாயாஜால நிகழ்ச்சிகள திகிலோட சொல்லி இருக்காங்க படம் நவம்பர் மாசம் வெளியாகுது.

  பிரைடே தி 13 த்

  பிரைடே தி 13 த்

  ஒரு தொடர் கொலைகாரன் மீண்டும் திரும்பிவருகிறான் அதற்குப் பின் நடப்பதை பார்க்கும் போது உங்கள் இதயம் துடிக்கும் சத்தம் உங்களுக்கு கேட்கும் எண்களுக்கும் கொலைகளுக்கும் உள்ள தொடர்பே இந்தப் படம் படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

  தி பாலோஸ் மற்றும் அன்பிரன்ட் ஆகிய இருபடங்களும் ஏற்கனவே வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

  English summary
  A door creaking, is the oldest trick for a horror flick. Spooky tricks have come a long way since then, Evil Dead and The Exorcist changed the way horrorfilms were perceived. Recently, films like The Blair Witch Project, Paranormal Activity and The Conjuring have won back credibility for the genre. Who doesn't like to heads turning, strange shadows and little children doing the weirdest shit, as you're fascinated by the whole aura that comes with a horrorfilm. We can't wait for the following 15 upcoming horror films:
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X