twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆழ்கடலில் உருவாகும் அவதார் தொடர்ச்சி: கேமரூனின் புதிய முயற்சி

    By Sudha
    |

    Avatar
    உலகத் திரைப்பட வரலாற்றில் புதிய சாதன படைத்த அவதார் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தனது அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றார். இந்தப் படம் அவதாரின் தொடர்ச்சியாக இருக்கும். இதற்காக அவர் கடலின் மிகவும் ஆழமான பகுதிக்குச் செல்லவுள்ளார்.

    இயக்கத்தில் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கும் அவர் படப்பிடி்ப்பு நடத்தவிருக்கும் இடம் ஆழ் கடல் ஆகும். இதற்காக பல கோடி ரூபாய் செலவில் அதி நவீன நீர் மூழகிக் கப்பல் ஒன்றை வாங்குகிறார். இந்த கப்பல் ஆஸ்திரேலியாவில் தயாராகிக் கொண்டிருக்கிறது.

    இது கடலுக்கு அடியில் 10, 972 மீட்டர் சென்று மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழியின் அடிவாரத்திற்குச் செல்லவிருக்கிறது.

    இது குறித்து கேமரூன் கூறியதாவது,

    கடலுக்குள் செல்ல கப்பல் ஒன்றைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் நடக்கும் கப்பல் கட்டும் வேலை பாதி முடிவடைந்துவிட்டது என்று அவர் கூறினார்.

    இரு இருக்கைகள், வெப்பமூட்டும் கருவி, 3 டி கேமரா ஆகியவை அந்த கப்பலில் இருக்கும்.

    கேமரூனுக்கு ஆழ்கடலுக்குச் செல்லும் ஆசை பல வருடங்களாக உள்ளது. இந்த ஆண்டே தனது கடல் பயணத்தை மேற்கொள்கிறார். அவரின் இந்த முயற்சி வெற்றி அடைந்தால் மரியானா அகழிக்குச் செல்லும் இரண்டாவது அணி இவர்கள் தான்.

    1960-ம் ஆண்டு விஞ்ஞானி ஒருவரும், கடற்படை லெப்டினன்ட் ஒருவரும் மரியானா அகழிக்குச் சென்றனர். கடல் அடிமட்டத்தை நெருங்க அவர்களுக்கு 5 மணி நேரம் ஆனது. அவர்கள் அங்கு 20 நிமிடங்கள் தான் இருந்தனர்.

    கேமரூனின் இந்த முயற்சி மூலம் மக்களுக்கு இன்னொரு புதிய அனுபவம் கிடைக்கவுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X