twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்விஸ் பிரஸ்லியின் தலைமுடி 15,000 டாலருக்கு ஏலம் போனது

    |

    Elvis Presley
    மறைந்த பாப் மேதை எல்விஸ் பிரஸ்லியின் தலைமுடிக் கொத்து, 15 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது.

    சிகாகோவில் நடந்த இந்த ஏலத்தில் தொலைபேசி மூலம் ஏலம் எடுத்த ஒரு நபர் 15 ஆயிரம் டாலருக்கு தலைமுடியை வாங்கி விட்டார். அந்த தொலைபேசி அழைப்பாளர் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

    1958ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் பிரஸ்லி சேர்ந்தபோது முடி வெட்டினர். அந்த முடிதான் இப்போது ஏலம் போயுள்ளது.

    சிகாகோவில் உள்ள லெஸ்லி ஹின்ட்மேன் ஏல நிறுவனத்திடம் இந்த தலை முடிக் கொத்து உள்ளிட்ட பிரஸ்லியின் நினைவுப் பொருட்கள் அளிக்கப்பட்டன. தற்போது அதில் முடியை ஏலம் விட்டுள்ளனர்.

    இந்த தலைமுடி உள்ளிட்டவற்றை பிரஸ்லி ரசிகர் மன்ற முன்னாள் தலைவர் கேரி பெப்பர் வைத்திருந்தார். தலைமுடி தவிர, சில உடைகள், பாடல் ரெக்கார்டுகள், கிறிஸ்துமஸ் கார்டுகளையும் அவர் ஏலத்திற்குக் கொடுத்தார்.

    1980ம் ஆண்டு பெப்பர் இறந்து விட்டார். அவரது நர்ஸ் இவற்றை வைத்திருந்து, பெப்பரின் விருப்பப்படி தற்போது ஏலத்திற்குக் கொடுத்துள்ளார்.

    பிரஸ்லியின் தலைமுடி 8000 முதல் 12 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 15 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X