twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜாக்சனின் 2 குழந்தைகளுக்கு நான்தான் தந்தை-டாக்டர்

    By Staff
    |

    Michael Jackson with Debbie Rowe
    லண்டன்: மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகளான பாரிஸ் மற்றும் பிரின்ஸ் மைக்கேலுக்கு நான்தான் தந்தை என்று ஒரு வழியாக பகிரங்கமாக கூறியுள்ளார் ஜாக்சனின் சரும வியாதி டாக்டர் அர்னால்ட் க்ளீன்.

    இவர்தான், ஜாக்சனின் இரு மூத்த குழந்தைகளுக்கும் தந்தை என்று ஜாக்சன் இறந்த சில நாட்கள் கழித்து செய்தி வெளியானது. ஆனால் இதை க்ளீன் மறுக்கவும் இல்லை, அதேசமயம் ஒப்புக் கொள்ளவும் இல்லை.

    இந்த நிலையில் இரு குழந்தைகளுக்கும் நான்தான் தந்தை என்று இப்போது கூறியுள்ளார் க்ளீன்.

    கடந்த 25 வருடங்களாக ஜாக்சனின் சரும வியாதிக்கான டாக்டராக இவர்தான் இருந்து வருகிறார். இவரிடம் நர்ஸாக இருந்தவர்தான் டெபி ரோ. தன்னைப் பார்த்துக் கொள்ள 1996ம் ஆண்டு டெபி ரோ வந்தபோது அவரைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார் ஜாக்சன்.

    ஜாக்சனால் குழந்தை பாக்கியத்தைத் தர முடியாத நிலை ஏற்பட்டதால், டாக்டர் க்ளீன் தனது உயிரனுவை டெபிக்கு கொடுத்து அவர் பிரின்ஸ் மற்றும் பாரிஸை பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. இந்தத் தகவலை எந்தக் கட்டத்திலும் வெளிப்படுத்தக் கூடாது என்று டாக்டர் க்ளீனும், டெபியும் பேசி வைத்துக் கொண்டனராம்.

    இதை ஆரம்பத்தில் மறுத்து வந்த டாக்டர் க்ளீன் இப்போது இரு குழந்தைகளுக்கும் மருத்துவ ரீதியாக தான்தான் தந்தை என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து டாக்டருக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், பிரின்ஸ் மைக்கேல், பாரிஸ் ஆகியோரின் மருத்துவ தந்தை தான்தான் என்று முடிவெடுத்துள்ளார் டாக்டர் க்ளீன். அவர்களை வளர்க்கும் உரிமையைப் பெறவும் அவர் தீர்மானித்துள்ளார். இதுகுறித்து சட்ட நிபுணர்களிடம் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    தான்தான் இரு குழந்தைகளுக்கும் தந்தை என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் டாக்டர் க்ளீன் உறுதியாக கூறுகிறார் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X