twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தற்கொலைக்கு முயலும் வாய்ப்பு - தீவிர கண்காணிப்பில் ஜாக்சன் டாக்டர்

    By Staff
    |

    Conrad Murray
    லாஸ் வேகாஸ்: மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு அவரது டாக்டர் கான்ராட் முர்ரேதான் காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால், அவரை எந்த நேரமும் போலீஸார் கைது செய்யும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ளக் கூடும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து அவரை உறவினர்களும், நண்பர்களும், அக்கம் பக்கத்தில் வசிப்போரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஜாக்சனின் மறைவுக்கு டாக்டர் கான்ராட் முர்ரே கொடுத்த சக்தி வாய்ந்த, அபாயகரமான மருந்துகளே காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

    இதுதொடர்பாக முர்ரேவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அவரது வீடுகளையும் சோதனையிட்டுள்ளனர்.

    இந்த நிலையில், முர்ரே மீதான குற்றச்சாட்டுக்களுக்கு போலீஸ் வசம் போதிய ஆதாரங்கள் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. எனவே விரைவில் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

    கைதாவது நிச்சயம் என்று முர்ரேவுக்கும் உறுதியாகத் தெரிந்து விட்டதால் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கலாம் என அவரது நண்பர்கள் அஞ்சுகின்றனர்.

    இதையடுத்து லாஸ் வேகாஸ் நகரில் உள்ள முர்ரேவின் வீட்டை அவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 55 வயதாகும் முர்ரேவின் வீட்டுக்கு அருகில் இருப்போரும் முர்ரேவின் நிலை குறித்து கவனத்துடன் உள்ளனர்.

    இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், முர்ரே கிட்டத்தட்ட உடைந்து போய் விட்டார். அவரால் வீட்டை விட்டு வெளியேற முடியாது. வெளியேறக் கூடிய நிலையும் இல்லை.

    உலகிலேயே மிகவும் வெறுக்கத்தக்கத மனிதராக இப்போது முர்ரே மாறியுள்ளார் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X