twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜாக்சனின் 51வது பிறந்த நாள்

    By Staff
    |

    Michael Jackson
    பாப் உலகின் சூப்பர் ஸ்டார் மைக்கேல் ஜாக்சனின் 51வது பிறந்த நாளை இன்று உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளுடன் கொண்டாடினர்.

    அமெரிக்காவின் புரூக்ளின் நகரில், இயக்குநர் ஸ்பைக் லீ, ஜாக்சனின் பாடல்கள் அடங்கிய இசை நிகழ்ச்சி ஒன்றை இன்று நடத்துகிறார். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை அந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதியை மைக்கேல் ஜாக்சன் தினமாக கொண்டாடும் அறிவிப்பையும் புரூக்ளின் நகர தலைவர் அறிவிக்கவுள்ளார்.

    பிரேசிலில் நடந்த ஜாக்சன் நிகழ்ச்சியின்போது அவருடன் இணைந்து பணியாற்றியவர் லீ என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகம் முழுவதும் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடந்தன.

    மைக்கேல் ஜாக்சனின் இயற்பெயர் மைக்கேல் ஜோசப் ஜாக்சன். அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள கேரி என்ற நகரில், 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி பிறந்தார் ஜாக்சன். 2009ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் மரணமடைந்தார்.

    பாடகர், பாடலாசிரியர், நடனக் கலைஞர், நடன வடிவமைப்பாளர், நடிகர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர் ஜாக்சன்.

    1964ல் தொடங்கிய அவரது பாப் உலக வாழ்க்கை 2009ம் ஆண்டு வரை நீடித்தது.

    ஜாக்சன் முதன் முதலில் 1994ம் ஆண்டு லிசா மேரி பிரஸ்லியை திரு்மணம் செய்தார். இந்தத் திருமணம் 1996ல் முடிவுக்கு வந்தது.

    அதே ஆண்டில், டெப்பி ரோ என்பவரை மணந்தார். இது 1999ல் முடிவடைந்தது.

    மைக்கேல் ஜாக்சனுக்கு பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன், பாரீஸ் ஜாக்சன், பிரின்ஸ் மைக்கேல் ஜாக்சன்-2 என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X