இந்திய கணவர் அருண் நாயரிடமிருந்து விவாகரத்து கோரும் பிரிட்டிஷ் நடிகை எலிசபெத் ஹர்லே

இதுதொடர்பாக லண்டன் உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த அருண் நாயரும் எலிசபெத் ஹர்லேயும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், தனது கணவரிடம் இருந்து எலிசபெத் விவாகரத்து கோரியுள்ளது பிரிட்டன் ஊடகங்களில் முக்கியச் செய்தியாக இடம்பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேயுடன், எலிசபெத் ஹர்லே நெருங்கிப் பழகி வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஃபோர் வெட்டிங்ஸ் அண்ட் ஃப்யூனரல் படம் மூலம் பிரபலமானவர் ஹர்லே.
Comments


Click it and Unblock the Notifications