ஹாலிவுட் நடிகர் செய்த செயல்..திடீரென அதிகரித்த ஆர்டர்கள்..அதிர்ந்துபோன ரெஸ்டாரண்ட் உரிமையாளர்

பிரபல ஹாலிவுட் ஸ்டார் ரியான் ரொனால்ட் அருமையான இங்கிலாந்தில் சாப்பிட்ட இந்திய உணவு அருமை என பதிவிட இதனால் அந்த ரெஸ்டாரண்ட் விற்பனை திடீரென அதிகரித்தது.

Recommended Video

செப்டம்பரில் வருகிறது Avatar | சினிமா செய்திகள் அப்டேட்

தனது ரெஸ்டாரண்ட் உணவை எவ்வித பிரதிபலன் இன்றி பாராட்டி வருமானம் பெருக ஹாலிவுட் ஹீரோ காரணமாக இருந்ததை எண்ணி இந்திய ரெஸ்டாரண்ட் ஓனர் நெகிழ்ந்து போனார்.

ஹாலிவுட் நடிகரின் இந்த செயல் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. பாராட்டையும் பெற்று வருகிறது.

 ஹாலிவுட் ஹீரோ ரியான்

ஹாலிவுட் ஹீரோ ரியான்

ஹாலிவுட் திரைப்படத்தில் பிரபல நடிகராக இருப்பவர் ரியான் ரெனால்ட்ஸ். இவர் கனடா நாட்டை சேர்ந்த நடிகர், தயாரிப்பாளர். பின்னர் இவர் ஹாலிவுட் உலகில் கால் பதித்து படங்களில் நடிக்கத் தொடங்கி பிரபலமானார். இவருடைய ஆரம்ப காலம் மிக கடினமாக இருந்தது. 1993 ஆம் ஆண்டு டெலிவிஷன் நாடகங்கள் மூலம் கால்பதித்த ஹாலிவுட் படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடிக்கத்தொடங்கினார். படிப்படியாகத் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகி 2004 க்கு மேல் ஹாலிவுட் ஹீரோவாக பிரபல நடிகராக மாறினார். இவருடைய சிறப்பு ரொமாண்டிக் ஹீரோ மற்றும் மார்வல் பட ஹீரோ பாணியை கையாளுவது. புகழ்பெற்ற கார்ட்டூன் படங்களுக்கு முக்கியமான ரோல்களுக்கு டப்பிங் பேசுவதில் புகழ்பெற்றவர்.

 பிட்புல் படத்தயாரிப்பாளர், ரொமாண்டிக் ஹீரோ

பிட்புல் படத்தயாரிப்பாளர், ரொமாண்டிக் ஹீரோ

ரொமாண்டிக் ஹீரோவான இவருக்கு உலகெங்கும் பெண் ரசிகைகள் அதிகம். இவருடைய இன்ஸ்டா பக்கத்தை பல லட்சக்கணக்கான இவருடைய பேப்பர் மேன், தீ வேர் ஹவுஸ், ஆர்.ஐ.பி.டி, கிரிமினல் பேட்ரோல் போன்ற படங்கள் பாலிவுட்டில் பிரபலமான படங்கள் ஆகும். இவரே எழுதி தயாரித்த பிட்புல் படம் உலக அளவில் இவருக்கு சிறப்பான பெயரை பெற்று தந்தது. அதன் பிறகு அதன் இரண்டாம் பாகத்தையும் தயாரித்தார். அதே போன்று இவர் நடித்த பல படங்கள் ஹாலிவுட்டில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

 ஹாலிவுட்டின் பிரபலம் ரியான்

ஹாலிவுட்டின் பிரபலம் ரியான்

இந்த ஆண்டு இவர் நடித்த புல்லட் ட்ரெயின் வெளியாகியுள்ளது, இது ஓடிடி தளத்திலும் உள்ளது. இவர் கால்பந்து பிரியரும் கூட. கால் பந்து கிளப்புக்காக தனக்காக ஒரு அணியை வாங்க் ஐரோப்பா சென்றிருந்த அவர் இங்கிலாந்து திரும்பியுள்ளார். உணவருந்த உணவு விடுதியை தேடியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள இந்தியருக்கு சொந்தமான உணவு விடுதியில் இந்திய உணவை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கான உணவை அவர் யார் என்று அறியாமலேயே வழக்கமான ஒரு வாடிக்கையாளர் என சப்ளை செய்துள்ளனர். உணவை சாப்பிட்ட ரியான் அதன் சுவையில் மயங்கி போனார்.

 இந்திய உணவினை பாராட்டி இன்ஸ்டாவில் பதிவிட்ட ரியான்

இந்திய உணவினை பாராட்டி இன்ஸ்டாவில் பதிவிட்ட ரியான்

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அந்த ரெஸ்டாரண்ட் பெயரை குறிப்பிட்டு இந்திய உணவு மிக சிறப்பாக இருந்தது என்று பாராட்டி இருந்தார். ஐரோப்பாவிலேயே சிறந்த இந்திய உணவு என்று பாராட்டி இருந்தார். இந்த பதிவை அடுத்து அந்த ரெஸ்டாரண்டில் ஆர்டர்கள் குவிந்தன. உணவகத்தின் உரிமையாளர் ரஜியா ரஹ்மானுக்கும் அவர் கணவருக்கும் திடீரென அதிகரித்த ஆர்டர்கள் ஆச்சர்யத்தை கொடுத்தது. என்ன விஷயம் என்று அவர்கள் தேடிய பொழுது அவரது மகன் ரியான் ரஹ்மான் ரியான் இன்ஸ்டாகிராமில் உள்ள பதிவைப் பார்த்து நமது ரேச்டாரண்டை ரியான் வாழ்த்தி போட்டுள்ளார் என ஆச்சர்யத்துடன் பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.

 ரியானின் நல்ல மனதை நெகிழ்ந்து பாராட்டிய ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள்

ரியானின் நல்ல மனதை நெகிழ்ந்து பாராட்டிய ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள்

அதன் பின்னரே ஹாலிவுட் ஆக்டர் ரியான் தங்கள் ரெஸ்டாரண்டின் உணவை சாப்பிட்ட விபரம் அவர்களுக்கு தெரிந்தது. உணவு சாப்பிடுவது மட்டுமல்ல சாப்பிட்டுவிட்டு சென்றதோடு அல்லாமல் அந்த உணவை பற்றி பாராட்டி இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ரெஸ்டாரண்ட் பெயரையும் சேர்த்து பதிவிட்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் ரெஸ்டாரண்ட் புகழ்பெறவும் ஆர்டர்கள் குவிய காரணமாகவும் ஹாலிவுட் பிரபலம் ரியானின் நல்ல மனதை நினைத்து ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் நன்றியுணர்வோடு நெகிழ்ந்து பாராட்டினர். ரியானின் இந்த செயலுக்குப் பின்னால் முக்கியமான விஷயம் இருக்கிறது என்று சொல்லலாம்.

 தந்தையின் வியாபாரத்தை கவனித்ததால் ஏற்பட்ட நல்ல எண்ணம்

தந்தையின் வியாபாரத்தை கவனித்ததால் ஏற்பட்ட நல்ல எண்ணம்

காரணம் அவருடைய தந்தை போலீஸாக இருந்து ரிட்டையர்ட்டு ஆனவுடன் சொந்தமாக உணவு நிறுவனம் ஒன்றை நடத்தினார். தந்தையின் வியாபாரத்தில் பட்ட கஷ்டம் அவர் மனதில் பதிந்து இருக்கலாம். ஹாலிவுட் பிரபலமாக கோடியில் புரண்டாலும் பழசை மறக்காத அவரது மனது சாப்பிட்ட உணவு நன்றாக இருந்தது என்றவுடன் அந்த உணவகத்தை பாராட்டி பதிவிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரியானின் நல்ல மனது ரெஸ்டாரண்ட் உரிமையாளர்களுக்கு மேலும் அவர்கள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது, சிறப்பான ஒன்று என்று சொல்லலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X