Don't Miss!
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கவலைக்கிடமான நிலையில் 'அவெஞ்சர்ஸ்’பட நடிகர் ஜெர்மி ரென்னர்.. கவலையில் ரசிகர்கள்!
அமெரிக்கா : 'அவெஞ்சர்ஸ்'பட நடிகர் ஜெர்மி ரென்னர் பனிப்புயுலில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் புத்தாண்டு அன்று கடுமையான பனிப்பொழிவு வீசியதில் ரோஸ் ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் இருந்த சுமார் 35 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும் பல வீடுகளை பனி மூடியது. மேலும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்தும் மின் ஒயர்கள் அறுந்து விழுந்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அப்பகுதி இருளில் மூழ்கியது. இந்த பனிப்புயலில் சிக்கி இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பனிப்புயல் குறித்து எதுவும் தெரியாத நடிகர் ஜெர்மி ரென்னர், ரோஸ் ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்ற போது, கடுமையான புயல் காற்றில் இவரது கார் சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகர் ஜெர்மி படுகாயம் அடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த மீட்பு படையினர், படுகாயமடைந்த ரென்னரை மீட்டு, விமானம் மூலம் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகரின் ஜெர்மி ரென்னர் உடல்நலம் குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஜெர்மி ரென்னர் இன்னும் ஆபத்தான கட்டத்தை தாண்டவில்லை என்றும்,உடல் நிலை சீராகவே இருப்பதாகவும் தெரித்துள்ளதால் ஜெர்மி ரென்னனின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

51 வயதான நடிகர் ஜெர்மி ரென்னர் 'தி ஹர்ட் லாக்கர்' படத்தில் நடித்ததற்காக 2010 ஆஸ்கர் விருதுக்கும், 'தி டவுன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். மார்வெல்லின் அவெஞ்சர்ஸ், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் படங்களில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெர்மி ரென்னர்.
மேலும் மார்வெல் திரைப்படங்களில் நடிந்ததை தவிர, மிஸ்டர் ரென்னர் மிஷன்: இம்பாசிபிள் இணையத் தொடர், அரைவல், அமெரிக்கன் ஹஸ்டில் மற்றும் 28 வீக் லேட்டர் ஆகியவற்றிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.