»   »  உலகின் கவர்ச்சிகரமான ஆண்: அப்படி இருந்த 'ராக்' இப்படி ஆகிவிட்டார்!

உலகின் கவர்ச்சிகரமான ஆண்: அப்படி இருந்த 'ராக்' இப்படி ஆகிவிட்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகின் கவர்ச்சிகரமான ஆணாக ஹாலிவுட் நடிகர் ராக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் ட்வெய்ன் ஜான்சன். டபுள்யூடபுள்யூஇ போட்டிகளில் கலந்து கொண்டு வந்த அவரின் மற்றொரு பெயர் ராக். ராக் குத்துச் சண்டையில் இருந்து ஹாலிவுட் படங்களில் நடிக்க வந்தார்.

மலை போன்று இருக்கும் ராக்கை ஹாலிவுட்டுல் காமெடி எல்லாம் செய்ய வைத்துவிட்டார்கள்.

அப்படி இருந்த ராக்கா?

அப்படி இருந்த ராக்கா?

குத்துச் சண்டை போட்டியில் கொடூரமாக இருக்கும் ராக்கா இப்போது ஹாலிவுட் படங்களில் குழந்தைகளுடன் காமெடி செய்கிறார் என்று ரசிகர்களே வியந்தனர். அவ்வளவு ஸ்வீட்டாகிவிட்டார்.

கவர்ச்சிகரமான ஆண்

கவர்ச்சிகரமான ஆண்

ஹாலிவுட் நடிகராகி பலரை கவர்ந்த ராக் தான் இந்த ஆண்டின் உலகின் கவர்ச்சிகரமான ஆணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை பீபிள் பத்திரிகை முறைப்படி அறிவித்துள்ளது.

மகிழ்சசி

மகிழ்சசி

உலகின் கவர்ச்சிகரமான ஆணாக பீபிள் பத்திரிகை தன்னை தேர்வு செய்துள்ளதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ராக் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள்

அதிகாலை 4 மணியாகியும் விழித்துள்ளேன். பயியற்சி மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொண்டிருக்கிறேன்...கவர்ச்சிகரமாக. பீபிள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. அன்புக்கு நன்றியுடன் இருப்பேன் என ராக் ட்வீட்டியுள்ளார். ராக்கிற்கு சிமோன் என்ற 15 வயது மகளும், ஜாஸ்மின் என்ற 11 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

English summary
Hollywood actor Rock is named as the sexiest man alive on the planet by People magazine.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil