twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வயசு 50 ஆனாலும் ஜேம்ஸ் பாண்டின் ஸ்டைல் இன்னும் மாறவே இல்லை!

    By Sudha
    |

    லண்டன்: மை நேம் இஸ் சாமி, பழனிச்சாமி.. என்று நம்ம ஊர்க்காரர்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளக் கூடிய அளவுக்கு பட்டையைக் கிளப்பிய கேரக்டர் ஜேம்ஸ் பாண்ட் 007. உலகம் பூராவும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் இந்த ரகசிய ஏஜென்ட் பிறந்து 50 வருடங்களாகி விட்டது. ஆனாலும் இன்னும் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் மீதான ரசிப்பும், லயிப்பும் உலக ரசிகர்களிடையே சற்றும் குறையவில்லை.

    முதல் படம் டாக்டர் நோ

    முதல் படம் டாக்டர் நோ

    இன்று உலகம் பூராவும் ஜேம்ஸ் பாண்ட் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றுதான் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான டாக்டர் நோ வெளியான தினமாகும்.

    முதல் பாண்ட் சீன் கானரி

    முதல் பாண்ட் சீன் கானரி

    முதல் படமான டாக்டர் நோ-வில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்தவர் சீன் கானரி. அந்த வகையில் இவர்தான் முதல் ஜேம்ஸ் பாண்ட் ஆவார்.

    விரைவில் 23வது படம்

    விரைவில் 23வது படம்

    இன்னும் சில வாரங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 23வது படமான ஸ்கைபால் வெளியாகவுள்ளது. ஸ்கைபால் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்திருப்பவர் டேணியல் கிரேக்.

    பாண்டுக்குப் பின்னால் பிறந்த கிரேக்

    பாண்டுக்குப் பின்னால் பிறந்த கிரேக்

    டேணியல் கிரேக் ஏற்கனவே கேசினோ ராயல், குவான்டம் ஆப் சொலஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 44 வயதான கிரேக், பாண்ட் படங்கள் பிறந்த பின்னரே பிறந்தவர் என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம்.

    6 படங்களில் நடித்த சீன் கானரி

    6 படங்களில் நடித்த சீன் கானரி

    முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகரான சீன் கானரி மொத்தம் 6 பாண்ட் படங்களில் நடித்துள்ளார். 1983ம் ஆண்டு வெளியான நெவர் சே நெவர் அகெய்ன் படமும் பாண்ட் படம்தான். ஆனால் இதற்கு அதிகாரப்பூர்வமான பாண்ட் படம் என்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை.

    ஒரே ஒரு படத்தில் நடித்த ஜார்ஜ் லேசன்பி

    ஒரே ஒரு படத்தில் நடித்த ஜார்ஜ் லேசன்பி

    இவர் தவிர ஜார்ஜ் லேசன்பி என்பவர் ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ் என்ற பாண்ட படத்தில் நடித்துள்ளார்.

    7 முறை பாண்ட் ஆன ரோஜர் மூர்

    7 முறை பாண்ட் ஆன ரோஜர் மூர்

    ரோஜர் மூர் 7 பாண்ட் படங்களில் நடித்த பெருமைக்குரியவர். இவர்தான் நீண்ட காலம் பாண்ட் வேடத்தில் உலா வந்தவர். அதாவது 13 வருடங்கள் பாண்ட் ஆக இருந்தவர் மூர்.

    டால்டனுக்கு 2

    டால்டனுக்கு 2

    இன்னொரு ஜேம்ஸ் பாண்ட் நடிகரான டிம்மோதி டால்டன் 2 படங்களில் நடித்துள்ளார்.

    காதலியை மணந்த முதல் பாண்ட்

    காதலியை மணந்த முதல் பாண்ட்

    பியர்ஸ் பிராஸ்னன் 4 படங்களில் நடித்தவர். இவர் ரோஜர் மூர் நடித்த பாண்ட் படம் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது பலர் அறியாத தகவல். பியர்ஸ் பிராஸ்னன் பாண்ட் படத்தில் அவரது காதலியாக நடித்தவரான காஸன்ட்ரா ஹாரிஸையே மணந்து கொண்டவர். ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த ஒருவர், அவரது காதலி வேடத்தில் நடித்தவரை மணந்தது இதுவே முதல்
    முறையாகும்.

    வசூலிலும் பாண்ட்தான் மன்னன்

    வசூலிலும் பாண்ட்தான் மன்னன்

    ஜேம்ஸ் பாண்ட் என்பது ஒரு கற்பனைக் கதாபாத்திரமாகும். இதுவரை மொத்தம் 22 பாண்ட் படங்கள் வந்துள்ளன. மொத்தமாக 5.1 பில்லியன் டாலர் வசூலை இந்தப் படங்கள் உலகம் முழுவதும் வசூலித்துள்ளன. கடைசிப் படமான குவான்டம் ஆப் சொலஸ் 600 மில்லியன் டாலரை வசூலித்தது. முதல் படமான டாக்டர் நோ படைத்த வசூல் 60 மில்லியன் டாலராகும்.

    English summary
    Here is a look at the 'James Bond' phenomenon ahead of 'Global James Bond Day' on Friday, which marks 50 years since the premiere of the first 007 movie 'Dr. No' starring Sean Connery as the suave secret agent. A few weeks later 'Skyfall', the 23rd official Bond film, will hit movie theatres.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X