நயன்தாராவுக்கு நடந்ததை போலவே.. கடைசி நேரத்தில் லொகேஷன் சேஞ்ச்.. தயாரிப்பாளரை மணந்த ஹாலிவுட் நடிகை!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ராக் என செல்லமாக WWE ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்து தற்போது ஹாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறி உள்ள டுவைன் ஜான்சனின் பே வாட்ச், சான் ஆண்ட்ரியாஸ், ராம்பேஜ் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்திய பிரபல ஹாலிவுட் நடிகை அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இந்த ஆண்டு பிரபல சினிமா நடிகைகளின் திருமண ஆண்டாக மாறி விட்டது. ஆலியா பட், மெளனி ராய், நிக்கி கல்ராணி, நயன்தாராவை தொடர்ந்து ஹாலிவுட்டில் பிரிட்னி ஸ்பியர்ஸ், அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ உள்ளிட்ட பிரபலங்களின் திருமணமும் அரங்கேறி உள்ளன.

தி பர்ஜ் படத்தின் தயாரிப்பாளரும் பே வாட்ச் படத்தில் நடித்த சக நடிகருமான ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ.

நீலக் கண்களுக்கு சொந்தக்காரி

நீலக் கண்களுக்கு சொந்தக்காரி

1986ம் ஆண்டு பிறந்து 36 வயதை கடந்த பிரபல ஹாலிவுட் நடிகை அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோவின் நீல நிற கண்களுக்கே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு வெளியான தி ஸ்குவின் அண்ட் தி வேல் படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர். ஜானஸ் பிரதர்ஸ், பெர்சி ஜாக்சன், தி ஹவுஸ், நைட் ஹன்டர், சூப்பர்மேன் மேன் ஆஃப் டுமாரோ, டை இன் தி கன்ஃபைட் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ராக் ஹீரோயின்

ராக் ஹீரோயின்

WWE சாம்பியனான ராக் பல வருடங்களாக ஹாலிவுட்டில் அதிகம் சம்பாதிக்கும் முன்னணி ஹீரோவாக மாறி உள்ளார். ஒரு படத்துக்கு 500 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் இவர் நடிப்பில் வெளியான பே வாட்ச், சான் ஆண்ட்ரியாஸ், ராம்பேஜ் உள்ளிட்ட பல படங்களில் அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ கவர்ச்சி பொங்க நடித்து ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். உலகளவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

கோலாகல திருமணம்

கோலாகல திருமணம்

Vogue இதழில் அதிகாரப்பூர்வமாக இவரது திருமண புகைப்படம் வெளியாகி உள்ளது. டாப் ஹீரோயின்கள் எல்லாம் தங்களின் திருமணத்தையும் வியாபாரம் ஆக்கி வரும் நிலையில், பல மில்லியன் டாலர் இந்த அட்டைப் படத்திற்கே கிடைத்துள்ளதாம். மணப்பெண் கோலத்தில் வெள்ளை நிற கவுனில் இளவரசி போல அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோ இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். நடிகரும் தயாரிப்பாளருமான ஆண்ட்ரூ ஃபார்முக்கும் ஹாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

திருமண லொகேஷன் மாற்றம்

திருமண லொகேஷன் மாற்றம்

நடிகை நயன்தாராவின் திருமண லொகேஷன் திருப்பதியில் இருந்து மகாபலிபுரத்துக்கு மாறியதை போலவே, அலெக்ஸாண்ட்ரா தத்தாரியோவின் திருமண இடமும் கடைசி நேரத்தில் மாறியது குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த நிலையில், அடுத்ததாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புக்காக நியூ ஆர்லியன்ஸ் நகரிலேயே திருமணத்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X