Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சீச்சீ.. இவ்ளோ அசிங்கமாவா.. சிறுநீரால் தனது பெயரை ஜானி டெப் எழுதியதாக பிரபல நடிகை புது குண்டு
லாஸ் ஏஞ்சல்ஸ்: குழந்தைங்க கூட இவ்ளோ சீப்பா சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்கு முற்றி வருகிறது ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மற்றும் நடிகை அம்பெர் ஹெர்ட் சண்டை.
Recommended Video
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஹீரோ ஜானி டெப்புக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
57 வயதாகும் ஜானி டெப்புக்கும் 38 வயதாகும் பிரபல நடிகை அம்பெர் ஹெர்டுக்கும் இடையே நீதிமன்றத்தில் மிகப்பெரிய மோதல் வெடித்து வருகிறது.
மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் வைகைப்புயல் வடிவேலு.. தீயாய் பரவும் தகவல்!

திருமணமும் விவாகரத்தும்
கேப்டன் ஜாக் ஸ்பேரோ என்ற பெயரை அறியாத உலக சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு பிரபலமான இவர், கடந்த 1983ம் ஆண்டு அன்னி அல்லிசன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அந்த திருமண வாழ்க்கை முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. பின்னர், அக்வாமேன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள அம்பெர் ஹெர்ட் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்த ஜானி டெப், 2017ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார்.

350 கோடி வழக்கு
பிரபல ஹாலிவுட் நடிகையான அம்பெர் ஹெர்ட், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், தனது விரலை துண்டித்ததாகவும், இதற்கு நஷ்ட ஈடாக அவர் 350 கோடி ரூபாய் தனக்கு தர வேண்டும் என பல ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறார். தற்போது அந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்து இருக்கிறது.

பதிலுக்கு அவரும்
தன்னை சித்ரவதை செய்தார், அடித்து துன்புறுத்தினார் என பதிலுக்கு நடிகை அம்பெர் ஹெர்டும் ஜானி டெப் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது மீண்டும் விசாரணைக்கு அந்த வழக்கு வந்துள்ள நிலையில், இருவரும் மாற்றி மாற்றி ஆதாரங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து வருகின்றனர்.

படுக்கையை நாசம் செய்தார்
தன்னை அடித்துத் துன்புறுத்தியது மட்டுமின்றி படுக்கையிலேயே அம்பெர் ஹெர்ட் மலம் கழித்து விட்டார் என்ற குற்றச்சாட்டை நடிகர் ஜானி டெப் வைக்க, இவர்களது வழக்கு சர்வதேச அளவில் நாற்றம் அடிக்கத் தொடங்கியது. அண்மையில், #JusticeForJohnnyDepp என்ற ஹாஷ்டேக்கை வெளியிட்டு, ஜானி டெப் ரசிகர்கள் அவருக்காக நியாயம் கேட்டனர்.

படாத பாடு
இதுவே ஒரு பெண்ணை ஒரு ஆண் துன்புறுத்தி இருந்தால், அவனுக்கு என்ன மாதிரியான தண்டனை கிடைத்திருக்கும் என்றும் ஜானி டெப் ஒரு குற்றமும் செய்யாதவர், அப்பாவி அவரை போட்டு படாத பாடு படுத்தியுள்ளார் அம்பெர் ஹெர்ட் என அவரது ரசிகர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சமூக வலைதளங்களில் முன் வைத்து வருகின்றனர்.

சிறுநீரில் பெயர் எழுதினார்
ஜானி டெப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது நீதிமன்றத்தில் சிறுநீரால் தனது பெயரை ஜானி டெப் எழுதினார் என்ற படு கேவலமான குற்றச்சாட்டு ஒன்றையும் நடிகை அம்பெர் முன் வைத்திருப்பது உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. என்னடா இது ஸ்கூல் பசங்க மாதிரி இப்படி மாற்றி மாற்றி அசிங்கப் படுத்திக் கொள்கின்றனரே என ஹாலிவுட்டில் இவர்களை பற்றிய பேச்சே அதிகரித்து வருகிறது.

பொய் சொல்கிறார் அம்பெர்
நடிகை அம்பெர் ஹெர்ட்டின் உதவியாளராக 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை இருந்த கேட் ஜேம்ஸ் எனும் பெண் உதவியாளர், அம்பெர் ஹெர்ட் சொல்வதில் உண்மை இல்லை என்றும், ஜானி டெப் இவரை துன்புறுத்தவில்லை. இவர் தான் அவரை ஓவராக டார்ச்சர் செய்தார் என்றும் கூறியுள்ளார். மேலும், தனது இளம் வயதில், தனக்கு பாலியல் தொல்லை நடந்த விஷயத்தை தான் அம்பெரிடம் கூறியிருந்தேன். ஆனால், தற்போது, அந்த கதையை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, அது அவருக்கே நடந்தது போல பொய் சொல்கிறார் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

எப்போது முடியும்
இப்படியொரு இடியாப்ப சிக்கலான இந்த வழக்கு எப்போது முடிவுக்கு வரும் என்றும், இருவரது ஆதாரங்களின் உண்மை தன்மைகளையும் ஆராய்ந்து நீதிமன்றம் எந்த மாதிரியான தீர்ப்பு அளிக்க உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள பல ஹாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆவலோடு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.