Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நான் இன்னும் அவரை லவ் பண்ணுறேன்...வழக்கிற்கு பிறகு ஆம்பர் ஹெர்ட் வெளியிட்ட பரபரப்பு கருத்து
வாஷிங்டன் : பிரபல ஹாலிவுட் நடிகரான ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் பல பாகங்களில் ஜேக் ஸ்பேரோ என்ற கேரக்டரில் நடித்து உலக ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானர்.
50 வயதாகும் ஜானி டெப், தன்னை விட 25 வயது சிறியவரான ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹியர்ட்டை 2015 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். 15 மாதங்கள் மட்டுமே நீடித்த இவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.
விவாகரத்திற்கு பிறகு 2018 ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் ஆம்பர் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அதில் அவர், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி ஜானியின் பெயரை குறிப்பிடாமல் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்த கட்டுரை தொடர்பாக முன்னாள் மனைவி ஆம்பர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜானி.

ஜானி தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய கோர்ட், ஜானிக்கு இழப்பீடு தொகையாக 78 கோடியும், அபராதமாக 38 கோடி ரூபாயும் என மொத்தம் 116 கோடி ரூபாயை வழங்க உத்தரவிட்டது. முன்னாள் மனைவிக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் தனக்கு கிடைத்த வெற்றியை பல கோடி செலவழித்து, தனது நண்பர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடினார் ஜானி.
இந்நிலையில் வழக்கிற்கு பிறகு முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார் ஆம்பர் ஹியர்ட், பல பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறுகையில், நான் சரியானதை தான் செய்தேன். என்ன நடந்தது, இதன் மூலம் நான் என்னவெல்லாம் பெற்றேன் என அனைத்தையும் என் மகளிடம் சொல்வேன் என்றார்.
உங்களின் எதிர்காலத்தை தற்போது எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு புன்னகையுடன் பதிலளித்த ஆம்பர், உங்கள் அனைவருக்குமே தெரியுமே நான் முழு நேர தாயாக இருக்கிறேன். அதை தொடர போகிறேன் என்றார். ஒருநாள் உங்கள் மகளிடம் இவை அனைத்தையும் சொல்ல வேண்டி வந்தால் என்ன சொல்வீர்கள் என ஆம்பரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
எதுவாக இருந்தாலும் நான் சரியானதை தான் செய்தேன். எனக்காகவும் உண்மைக்காகவும் நிற்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். நான் இப்போதும் அவரை காதலிக்கிறேன். எதையும் என் மகளிடம் மறைக்க போவதில்லை. நிச்சயம் ஒருநாள் அவளிடம் அனைத்தையும் சொல்வேன் என்றார்.ஆம்பரின் இந்த பரபரப்பு பேட்டி இரண்டு பாகங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
முதல் பாகம் தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், பேட்டியில் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆம்பர், அக்குவாமேன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். கடந்த ஆண்டு தான் தனது மகளின் பெயரை ஆம்பர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார்.
என்ன மனுஷன்யா ஜானி டெப்.. காசுக்காக கேஸ் போடல.. எக்ஸ் மனைவி அவ்வளவு பணத்தையும் தர தேவையில்லையா?