twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சர்வதேச திரைப்பட விழா.. மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ் நாள் சாதனையாளர் விருது !

    |

    கேரளா : ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

    21ம் நூற்றாண்டின் சிறந்த சினிமா சிந்தனையாளர்களில் ஒருவராக திரு மார்ட்டின் விளங்கி வருகிறார்.

    இசைவாணிக்கு ஏன் தடையா இருக்கீங்க?... இமானை கேள்வி கேட்ட கமல் !இசைவாணிக்கு ஏன் தடையா இருக்கீங்க?... இமானை கேள்வி கேட்ட கமல் !

    ஹாலிவுட் திரைப்பட இயக்குநரான இவர், குட்ஃபெல்லாஸ், டாக்ஸி டிரைவர், ரேஜிங் புல், தி டிபார்ட்டட், ஷட்டர் ஐலேண்ட் மற்றும் தி வேர்ல்ட் ஆஃப் தி வால் ஸ்ட்ரீட் போன்ற தலைசிறந்த படைப்புகளை அவர் உருவாக்கியுள்ளார்.

    இந்திய சர்வதேச திரைப்பட விழா

    இந்திய சர்வதேச திரைப்பட விழா

    கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதில்,இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இவ்விழாவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும் கோவா மாநில அரசும் இணைந்து நடத்துகின்றன. இந்த விழா தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும்.

    மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு விருது

    மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு விருது

    இவ்விழாவில் ஹாலிவுட் இயக்குநர் திரு மார்ட்டின் ஸ்கார்சீஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

    பெருமை அடைகிறேன்

    பெருமை அடைகிறேன்

    இந்த விருதை காணொலி மூலம் பெற்றுக் கொண்ட திரு மார்ட்டின், எக்காலத்திலும் சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான சத்யஜித் ரேயின் பெயரால் வழங்கப்படும் விருதைப் பெறுவதில் நான் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு முறையும் நான் அவருடைய திரைப்படங்களைப் பார்க்கும்போது, ​​அது ஒரு புதிய அனுபவமாக மாறும் என்றார்.

    இந்திய திரைத்துறைக்கு நன்றி

    பதேர் பாஞ்சாலியைப் பார்ப்பது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, அது எனக்கு ஒரு புதிய உலகத்தைத் திறந்து காட்டியது என்றார். விருதைப் பெற்றதற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு இந்திய திரைப்படத் துறைக்கு நன்றி தெரிவித்தார்.

    ஹேமா மாலினிக்கு விருது

    ஹேமா மாலினிக்கு விருது

    நடிகை ஹேமா மாலினினுக்கு திரைப்பட ஆளுமைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாக ஹேமா மாலினி கூறினார். இந்த விழாவிற்கு தமிழ் சினிமாவில் இருந்து வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. குறும்படங்களின் பட்டியலில் ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ஸ்வீட் பிரியாணி இடம்பெற்றுள்ளது.

    English summary
    American filmmaker Martin Scorsese was given the Satyajit Ray Lifetime Achievement Award at the 52nd edition of the International Film Festival of India held in Goa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X