»   »  கேன்சர் அபாயம்: மார்பகங்களை அடுத்து கர்பப்பையை அகற்றிய நடிகை ஏஞ்சலினா ஜூலி

கேன்சர் அபாயம்: மார்பகங்களை அடுத்து கர்பப்பையை அகற்றிய நடிகை ஏஞ்சலினா ஜூலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருந்ததால் அவரின் கருப்பை மற்றும் கருமுட்டை குழாய்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி, நடிகர் பிராட் பிட் தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் 3, தத்தெடுத்த குழந்தைகள் 3 என மொத்தம் 6 குழந்தைகள் உள்ளார்கள். ஜூலியின் தாய் மார்ஷலின் பெட்ர்னாட் மார்பக புற்றுநோயால் பலியானார். இந்நிலையில் ஜூலிக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

ஜூலிக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட 87 சதவீத வாய்ப்பும், கர்பப்பை புற்றுநோய் ஏற்பட 50 சதவீத வாய்ப்பும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மார்பகம் அகற்றம்

மார்பகம் அகற்றம்

புற்றுநோய் அபாயம் இருந்ததால் கடந்த 2013ம் ஆண்டு ஜூலி அறுவை சிகிச்சை மூலம் தனது 2 மார்பகங்களையும் அகற்றினார்.

கர்பப்பை

கர்பப்பை

கர்பப்பை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் இருந்ததால் அதையும் அகற்ற முடிவு செய்தார் ஜூலி.

ஆபரேஷன்

ஆபரேஷன்

அறுவை சிகிச்சை மூலம் ஜூலியின் கர்பப்பை மற்றும் கருமுட்டை குழாய்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

குழந்தைகள்

குழந்தைகள்

இனி என்னால் குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியாது. என் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் என நினைக்கிறேன். இது வாழ்வில் ஒரு பகுதி. இதற்காக பயன்பட வேண்டிய அவசியம் இல்லை என்று ஜூலி தெரிவித்துள்ளார்.

English summary
Hollywood actress Angelina Jolie's ovaries and fallopian tubes have been removed after cancer scare.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil