Don't Miss!
- News
மெல்ல உயரும் கொரோனா... உலகம் முழுவதும் ஒரே நாளில் 740,209 பேர் பாதிப்பு
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உக்ரைன் நாட்டிற்கு திடீர் விசிட் அடித்த ஏஞ்சலினா ஜோலி.. வேறலெவலில் டிரெண்டாகும் வீடியோ!
உக்ரைன்: ஹாலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை ஏஜ்சலினா ஜோலி திடீரென உக்ரைன் நாட்டிற்கு இன்று விசிட் அடித்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
சாதாரணமாக ஒரு காபி ஷாப்பிற்குள் ஏஞ்சலினா திடீரென நுழைந்ததும் அவரை பார்த்த அங்குள்ள உக்ரைன் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ள ஏஞ்சலினா ஜோலியின் புகைப்படங்களும், வீடியோக்களும் உலகளவில் டிரெண்டாகி வருகின்றன.
ப்ரீமியரில் கலந்துகொண்டது ஒரு குத்தமாய்யா.. தனிமைப்படுத்தப்பட்ட ஏஞ்சலினா ஜோலி மற்றும் சல்மா ஹயக்!

ஏஞ்சலினா ஜோலி
பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலிக்கு தற்போது 46 வயதாகிறது. டாம்ப் ரைடர், வான்டட், மெலெஃபிஷண்ட், எட்டர்னல்ஸ் என ஏகப்பட்ட ஹாலிவுட்டின் பிளாக்பஸ்டர் படங்களில் இவர் நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட ஏஞ்சலினா ஜோலி கடந்த 2019ல் அவரையும் விட்டுப் பிரிந்தார்.

போர் பாதிப்பில் உக்ரைன்
உக்ரைன் நாட்டின் மீது அதிரடியாக ரஷ்யா தொடுத்த போருக்கு உலகின் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஹாலிவுட் நடிகர்களான அர்னால்டு, டிகாப்ரியோ உள்ளிட்ட பலர் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில், போருக்கு பிறகு முதன் முறையாக ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி அங்கே சென்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

உக்ரைனில் ஏஞ்சலினா ஜோலி
உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் போரை நடத்தி வருகிறது ரஷ்யா. இந்நிலையில், உக்ரைனின் வடக்கு பகுதியில் உள்ள Lviv எனும் பகுதிக்கு நடிகை ஏஞ்சலினா ஜோலி திடீரென விசிட் அடித்து அங்குள்ளவர்களை மட்டுமின்றி சர்வதேச ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். ஏஞ்சலினா ஜோலியின் இந்த திடீர் வருகைக்கு என்ன காரணம் என பலரும் குழம்பிப் போயுள்ளனர்.
|
ரொம்ப சிம்பிளாக
ரொம்பவே சிம்பிளான ஒரு உடையை அணிந்து கொண்டு எல்விவ் பகுதியில் உள்ள காபி ஷாப் ஒன்றில் திடீரென நுழைந்த ஏஞ்சலினா ஜோலியை பார்த்த அங்குள்ளவர்கள் இன்பதிர்ச்சி அடைந்தனர். மேலும், நடிகையை வரவேற்றும் அவருடன் புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தனர். புதிய படப்பிடிப்புக்காக வந்துள்ளாரா? அல்லது உக்ரைன் நாட்டு மக்களை சந்திக்கவே வந்துள்ளாரா ஏஞ்சலினா ஜோலி என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.