அடுத்தடுத்து மோதிய கார்கள்...விபத்தில் சிக்கிய அர்னால்ட்

லாஸ் ஏஞ்சல்ஸ் : கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானதில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சுவார்செனேகர் காயங்கள் ஏதுமின்றி தப்பி உள்ளார். இந்த விபத்தில் பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

74 வயதாகும் அர்னால்ட், டெர்மினேட்டர் உள்ளிட்ட உலக அளவில் மிகவும் பல பிரபலமான பல படங்களில் நடித்துள்ளார். 2003 ம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, கலிஃபோர்னியாவின் கவர்னரானார். 2011 ம் ஆண்டு வரை தொடர்ந்து பதவியில் நீடித்தார் அர்னால்ட்.

ஹாலிவுட் நடிகரும், கலிஃபோர்னியா முன்னாள் கவர்னருமான அர்னால்ட், தனது GMC Yukon ரக பெரிய காரில் Sunset Boulevard ல் இருந்து Allenford Avenue க்கு சென்று கொண்டிருந்தார். Riviera Contry Club அருகே சென்று கொண்டிருந்த போது அர்னால்டின் கார் மீது குறுக்கே வந்த இரண்டு கார்கள் மோதி விபத்திற்குள்ளாகின.

Arnold Schwarzenegger involved in multi vehicle accident

கார்கள் அடுத்தடுத்து மோதிய இந்த விபத்தில் காயங்கள் ஏதுமின்றி அர்னால்ட் தப்பி உள்ளார். பெண் ஒருவர் மட்டும் சிறு காயமடைந்துள்ளார். குடி போதையில் கார் ஓட்டி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் நான்கு கார்கள் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. யாரால், எப்படி இந்த விபத்து நடந்தது என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக போட்டோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

இந்த விபத்தில் அர்னால்டிற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், காயமடைந்த பெண் குறித்து அவசர சேவை மையத்துடன் தொடர்பு கொண்டு தொடர்ந்து அர்னால்ட் விசாரித்து வருவதாக அவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அர்னால்டின் இந்த நல்ல மனசை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X