twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜூலை 3-ம் தேதி முதல் அர்னால்டின் டெர்மினேட்டர்!

    By Shankar
    |

    அர்னால்ட் ஸ்வார்ஷ்நெகர் நடித்துள்ள ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்' (‘Terminator Genisys') வரும் ஜூலை 3-ம் தேதி வெளியாகிறது.

    ஐ வில் பி பேக், என்ற தனது பிரபலமான வசனத்துடன் ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸில் மீண்டும் தோன்றுகிறார் அர்னால்ட். இந்தப் படம் தமிழில் ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்' என்ற வெளியாகிறது.

    ஆக்ஷன், அதிரடி கதையம்சம் கொண்ட டெர்மினேட்டர் பட வரிசையில் அடுத்த பகுதியான இது. எதிர்காலத்தில் நடக்கும் கதையாக தொடங்கி சாரா கானர், ஜான் கானர், கையில் ரீஸ் மற்றும் டெர்மினேட்டர்கள் இடையே வெவ்வேறு கால கட்டத்தில் நடக்கும் ஒரு போட்டியாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

    அர்னால்ட்

    அர்னால்ட்

    மீண்டும் டெர்மினேட்டராக தோன்றுவது குறித்து அர்னால்டு கூறுகையில், "எனக்கு நினைவு தெரிந்த வரை 30 வருடங்களுக்கு மேல் ஒரு தொடரில் ஒரே நடிகர் நடிப்பது இதுதான் முதல்முறை. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் கோனான் தி பார்பேரியன் போன்று நான் நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களையும் மீண்டும் நடிக்க அழைக்கிறார்கள். இது வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கு இருக்கும் மரியாதையும் எதிர்பார்ப்பும் எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது," என்கிறார்.

    அலன் டெய்லர்

    அலன் டெய்லர்

    பிரம்மாண்ட படமான ‘தோர்: தி டார்க் வேர்ல்ட் அண்ட் கேம் ஆஃப் த்ரான்ஸ்' படத்தின் இயக்குனர் ஆலன் டெய்லர் தான் ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்' படத்தை இயக்குகிறார்.

    கேமரூன் ஆரம்பித்தது...

    கேமரூன் ஆரம்பித்தது...

    இப்படத்தை இயக்கிய அனுபவம் பற்றி அவர் கூறுகையில், "தோர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தில் ஈடுபடுவது சற்று அயர்ச்சியாகவே இருந்தது. எனினும், ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்' படத்தின் வெற்றி கண்முன் தெரிந்ததால் விட இயலவில்லை. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய முதல் இரண்டு பாகங்கள் ஆக்ஷன் பின்னணியாய் இருந்தாலும் மானிடராய் இருப்பதன் உன்னதத்தை உணர்த்துவதாய் அமைந்திருந்தது என்னை பெரிதும் ஈர்த்தது," என்றார்

    3டியில்

    3டியில்

    ஸ்கைடேன் புரொடக்ஷன்ஸ், பாரமவுண்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாக வரும் ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்' திரைப்படத்தை வயாகாம் 18 நிறுவனத்தினர் இந்தியாவில் வெளியிடுகிறார்கள். ஆங்கிலம்,ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் Imax 3D, 3D டிஜிட்டல் மற்றும் 2D என அனைத்து திரையிடல் தொழிநுட்பத்திலும் திரையிடப்படுகிறது.

    English summary
    He said “I’ll be Back” and he’s back… After a long wait for the fan boys, Arnold Schwarzenegger will be returning to the franchise with‘Terminator Genisys’ releasing on July 3rd.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X