»   »  "தி மார்ஷியன்"... அடுத்த மாதம் ரிலீசாகும் படத்தை முன்கூட்டியே விண்ணில் பறந்தபடி ரசித்த வீரர்கள்!

"தி மார்ஷியன்"... அடுத்த மாதம் ரிலீசாகும் படத்தை முன்கூட்டியே விண்ணில் பறந்தபடி ரசித்த வீரர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: அடுத்த மாதம் ரிலீசாக உள்ள ஹாலிவுட் படமான தி மார்ஷியன் படத்தை, முன்கூட்டியே சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தபடியே விண்வெளி வீரர்கள் பார்த்து ரசித்தனர்.

செவ்வாய் கிரகத்தைக் கதைக்களமாகக் கொண்டு தயாராகியுள்ளது தி மார்ஷியன் படம். நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் அடுத்தமாதம் ரிலீசாக உள்ளது.

பிரமாண்டமாக தயாராகியுள்ள இப்படத்தைக் காண உலகம் முழுவதும் உள்ள ஹாலிவுட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் இப்படத்தை முன்கூட்டியே கண்டுகளித்துள்ளனர்.

தி மார்ஷியன்...

தி மார்ஷியன்...

செவ்வாய்கிரகத்தில் மாட்டிக் கொள்ளும் விண்வெளி வீரரைப் பற்றிய கதை தான் தி மார்ஷியன். செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளிக் குழு அங்கு வீசும் பிரம்மாண்டமான புயலின் காரணமாக தப்பித்தோம், பிழைத்தோம் என்று பூமிக்குத் திரும்புகிறது. அந்தக் குழுவில் இடம்பெற்ற நாயகன் மட்டும் தவறுதலாக செவ்வாய் கிரகத்தில் மாட்டிக் கொள்கிறார். அவர் அங்கிருந்து எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரிட்லி ஸ்காட் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாட் டாமன் மற்றும் ஜெசிகா செஸ்டன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். படத்தின் டிரைலருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. பட ரிலீசுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிறப்புக் காட்சி...

சிறப்புக் காட்சி...

இந்தச் சூழலில் தான் இந்தப் படத்தை விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு சிறப்பாக போட்டுக் காண்பித்துள்ளது படக்குழு.

பயணம் தொடர்கிறது...

பயணம் தொடர்கிறது...

இந்தப் படத்தைப் பார்த்த விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்றிரவுதான் இந்தப் படத்தைப் பார்த்தேன், செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் எங்கள் பயணம் இன்று மீண்டும் தொடர்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

எங்கள் வாழ்க்கையில் பிரதிபலிப்பு...

எங்கள் வாழ்க்கையில் பிரதிபலிப்பு...

இதே போல் மற்றொரு விண்வெளி வீரரான லிண்ட்க்ரென், ‘தி மார்ஷியன்' எங்கள் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்திருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

கிராவிட்டி...

கிராவிட்டி...

தி மார்ஷியனைப் போலவே, கிராவிட்டி படத்தையும் தியேட்டருக்கு வருவதற்கு முன்பாகவே விண்வெளி வீரர்கள் பார்த்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: the martian, twitter
English summary
The Martian may not hit theaters until October, but the upcoming movie has already made its premiere — in space. Astronauts on board the International Space Station got to watch an advanced screening of The Martian this weekend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil